யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு பகுதியில் இடம்பெறும் கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களோடு தொடர்புடையதாகக் கூறப்படும் ‘ஆவா’ குழுவினை இராணுவமோ, விடுதலைப் புலிகளோ, அரசியல் கட்சிகளோ உருவாக்கவில்லை என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
“ஆவா குழு என்பது, வெறுமனே பிரதேச மக்களிடம் கப்பம் பெற்று, குற்றங்களில் ஈடுபடும் கும்பல். அந்தக் கும்பல் தொடர்பில், பலரும் பலவிதமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். குறித்த கும்பல் தொடர்பில், அனைத்துத் தகவல்களும் சேரிக்கப்பட்டுள்ளன. அத்தோடு, அவர்களைக் கைதுசெய்யுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பியகமவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே ருவான் விஜயவர்த்தன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to ஆவா குழுவினை இராணுவமோ, புலிகளோ, அரசியல் கட்சிகளோ உருவாக்கவில்லை: ருவான் விஜயவர்த்தன