உலகின் வழிகாட்டியாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி திகழ்கிறார் என்று சீன நாளிதழ் புகழாரம் சூட்டியுள்ளது.
பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தது துணிச்சலான நடவடிக்கை என்றும், வெற்றி, தோல்வியை பொருட்படுத்தாமல் ஒரு பந்தயத்தில் பங்கேற்பதை போன்றது இந்த நடவடிக்கை இதை செய்வதற்கு நிச்சயம் கடுமையான உறுதி வேண்டும். அது மோடியிடம் இருக்கிறது என்று சீனாவின் அரசு நாளிதழ் குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
மோடி எடுத்திருப்பது, மிகவும் துணிச்சலான நடவடிக்கையாகும். ஒருவேளை எங்கள் நாட்டிலும் 50 மற்றும் 100 யுவான் நோட்டுகளை சீனாவில் தடை செய்திருந்தால், என்ன நடந்திருக்கும் என்பதை எங்களால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. அந்த வகையில் இந்தியர்கள் பராவாயில்லை என்று இந்தியர்களுக்கும் ஒரு பாராட்டை கொடுத்துள்ளது.
ரூபாய் நோட்டுச் சீர்திருத்தம், மோடிக்கான பந்தயமாகும். அரசின் அமலாக்கத் திறன் மீதும் இந்தியர்களின் சகிப்புத்தன்மை மீதும் நம்பிக்கை வைத்து அவர் பந்தயம் கட்டியுள்ளதால், எதிர்மறையான சமூக பாதிப்புகள், குறைவான மன உறுதி ஆகியவற்றை சீர்திருத்தங்களின் பயன்களால் குறைக்கலாம். எனினும், வெற்றி, தோல்வியைப் பொருட்படுத்தாமல் ஒரு முன்னுதாரணத்தை மோடி உருவாக்கியுள்ளார்.
ரூபாய் நோட்டுச் சீர்திருத்தம் கொண்டு வரப்படும் தகவல் கசிந்து விடாமல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கிலேயே இந்த சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டது. சீர்திருத்தங்களை மேற்கொள்வது எப்போதும் கஷ்டமானது. இருந்தாலும் நல்ல விஷயம். அந்த வகையில் மோடி அரசின் நடவடிக்கை நல்லதுதான். ஆனால், அதை அமல்படுத்தும் விதம், ஒட்டு மொத்த சமூகத்தின் ஒத்துழைப்பு ஆகியவற்றைப் பொருத்தே அந்த நடவடிக்கை வெற்றியடையும். இது வெற்றியடைந்தால் உலகத்திற்கே இது முன்னுதாரணமாக இருக்கும் என்று சீன நாளிதழ் பெருமையுடன் எழுதியுள்ளது.

0 Responses to