அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மெட்ரோ ரெயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
அமெரிக்க நியூயார்க் நகரின் ப்ரோங்ஸ் என்னுமிடத்தில் சென்றுகொண்டிருந்த பயணிகள் ரெயில் டிசம்பர் 1ஆம் தேதி காலை 7 மணியளவில் தடம்புரண்டது. 7 பெட்டிகளுடன் சென்ற அந்த ரெயிலின் 5 பெட்டிகள் அருகிலிருந்த ஹார்லெம் ஆற்றின் கரை அருகே விழுந்தது. இதில் குறைந்தது 4 பேர் பலியாயினர். 40-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர் என செய்திகள் வெளியாகி உள்ளன.
உடனே சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தையடுத்து ஹட்சன் வழியாக சென்ற ரெயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
வளைவான பகுதியில் மிக வேகமாக ரெயில் வந்ததே இந்த விபத்திற்கான காரணம் என்று பயணிகள் தெரிவித்தனர். ரெயில் பெட்டிகள் ஆற்றில் விழுந்திருந்தால் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து இருக்கும் என்று உயிர் தப்பிய பயணிகள் தெரிவித்தனர்.

0 Responses to நியூயார்க்கில் பயணிகள் மெட்ரோ ரயில் விபத்து: 4 பேர் பலி (படங்கள் இணைப்பு)