வடக்கு மாகாண முதலமைச்சர் பதவியை அடைய வேண்டும் என்று தான் என்றைக்குமே ஆசைப்பட்டிருக்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
“வடக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கு நான் ஆசைப்பட்டதாக அல்லது அந்தப் பதவிக்கு வர விரும்பியமாக தற்போதைய முதமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தொடர்ந்தும் கூறி வருகின்றார். அது தவறானது. அது, எனக்கு மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்துகின்றது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாண சபைத் தேர்தல் காலத்தில் முதலமைச்சர் வேட்பாளர் பற்றிய உரையாடல்கள் ஆரம்பித்த போது எந்தவொரு தருணத்திலும் தான் யாரிடமும் முதலமைச்சராக வரவேண்டும் என்று விரும்பியதாக தெரிவித்திருக்கவில்லை என்றும், ஆனாலும், தேவையற்ற ரீதியில் தான் அந்தப் பதவிக்கு ஆசைப்பட்டதாக தெரிவிக்கப்படுவது வரலாற்றை பிழையாக எழுதிவிடும் என்றும் மாவை சேனாதிராஜா கூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற காலைக்கதிர் பத்திரிகை அறிமுக விழாவில் உரையாற்றிய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தான் தற்போது வகிக்கும் பதவியில் சிரேஷ் ஊடகவியலாளர் என்.வித்தியாதரன் அல்லது மாவை சேனாதிராஜா இருந்திருக்க வேண்டியது. அவர்களைக் காணும் போதெல்லாம் தனக்கு வருத்தம் உண்டாகின்றது என்று தெரிவித்திருந்தார்.
இதனையடுத்தே, மாவை சேனாதிராஜா தான் என்றைக்குமே முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டிருக்கவில்லை என்று நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கட்சிக் கூட்டமொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to சி.வி.விக்னேஸ்வரன் கூறுவது தவறு; நான் என்றைக்குமே முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்படவில்லை: மாவை