புதிய நிர்வாகிகள் பட்டியலை அளிக்க பி.சி.சி.ஐ.,க்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.
கடந்த 2013ல் ஐ.பி.எல். தொடரில் சூதாட்ட சர்ச்சை வெடித்தது. இதனையடுத்து,
இந்திய கிரிக்கெட் போர்டில் (பி.சி.சி.ஐ.,) செய்ய வேண்டிய சீர்திருத்தம்
குறித்து சுப்ரீம் கோர்ட்டால் அமைக்கப்பட்ட லோதா குழு பரிந்துரை செய்தது.
இதை அமல்படுத்தாத தலைவர் அனுராக் தாகூர், செயலர் அஜய் ஷிர்கே
நீக்கப்பட்டனர்.
புதிய பி.சி.சி.ஐ., நிர்வாகிகளை தேர்வு செய்ய அமைக்கப்பட்ட
வழக்கறிஞர்களான கோபால் சுப்பிரமணியம், அனில் திவான் பட்டியலை
அளித்திருந்தது. இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கான்விகார்
அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜாரான மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி,' பி.சி.சி.ஐ., புதிய நிர்வாகிகள்
பட்டியலை நாங்கள் அளிக்கிறோம். இதற்கான நபர்களை 2 வாரத்திற்கு பின்
அறிவிக்க வேண்டும்,'என வலியுறுத்தினார்.
இதற்கு கோபப்பட்ட நீதிபதிகள், கடந்த ஜூலை மாதம் லோதா குழு பரிந்துரை
குறித்து உத்தரவு அளித்தோம். அப்போது நீங்கள் எங்கு இருந்தீர்கள்? என,
கேள்வி எழுப்பினர். 'அடுத்த மாதம் முதல் வாரத்தில் சர்வதேச கிரிக்கெட்
கவுன்சில் (ஐ.சி.சி.,) கூட்டம் நடக்கவுள்ளது.
இதில், பி,சி.சி.ஐ., சார்பில் நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும். எனவே,
புதிய பட்டியலை அளிக்க எங்களுக்கு அனுமதி தர வேண்டும்,' என, பி.சி.சி.ஐ.,
தரப்பில் வாதிடப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள் அளித்த உத்தரவு:
வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம் அளித்த நிர்வாகிகள் பட்டியலில் 70 வயதை தாண்டியவர்களை ஏற்க மாட்டோம். பி.சி.சி.ஐ., மற்றும் மத்திய அரசின் சார்பில் நிர்வாகிகள் பட்டியலை வரும் 27ம் தேதிக்குள் சமர்ப்பிக்க
வேண்டும்.
இது, லோதா குழுவின் பரிந்துரைப்படி இருப்பது அவசியம். இந்த வழக்கின்
அடுத்த விசாரணை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு
உத்தரவிட்டனர்.

0 Responses to புதிய நிர்வாகிகள் பட்டியல் -பிசிசி.ஐ.,க்கு உச்ச நீதிமன்றம் அனுமதி