பொறுப்புக்கூறலில் இலங்கை நிறைவேற்ற வேண்டிய விடயங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் தொடர் கண்காணிப்பினை மேற்கொள்ள வேண்டும் என்று உலகத் தமிழர் பேரவை (Global Tamil Forum) கோரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் அல் ஹூசைன் இலங்கை தொடர்பில் அண்மையில் வெளியிட்ட அறிக்கை வரவேற்கத்தக்கது என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பு மாற்றத்துக்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சி வரவேற்கப்பட வேண்டியது. ஆயினும், நிலைமாறு கால நீதிப்பொறிமுறைமை வருத்தப்படுமளவிற்கு மந்த கதியில் இடம்பெற்று வருகின்றது. நிலைமாறு கால நீதி மற்றும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் தரப்புக்கள் ஒரே விதமான நிலைப்பாட்டினைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் உலகத் தமிழர் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

0 Responses to இலங்கையை ஐ.நா. உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்: உலகத் தமிழர் பேரவை