பொறுப்புக்கூறல் பொறிமுறைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகம் ஒன்றை இலங்கையில் நிறுவி கண்காணிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் கலந்து கொண்ட முக்கிய கூட்டமொன்று வவுனியாவில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடுகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்புவது என்று முடிவு செய்யப்பட்டது. அதிலேயே மேற்கண்ட விடயமும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்றைய கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த மூன்று தீர்மானங்களாவன:
1. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் இணை அனுசரணையோடு 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.
2. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகம் ஒன்றை இலங்கையில் நிறுவி அதன் ஊடாக ஐக்கிய நாடுகள் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் பொறிமுறையை கண்காணிக்க வேண்டும்.
3. 30/1 இலக்க தீர்மானம் உரிய காலத்தில் நிறைவேற்ற இலங்கை அரசாங்கம் தவறினால் ஐக்கிய நாடுகள் பொறிமுறை ஒன்றை நிறுவி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க ஆவனை செய்ய வேண்டும்.” என்பனவாகும்.
குறித்த மூன்று தீர்மானங்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஈபிஆர்எல்எப் தவிர்ந்த ஏனைய பங்காளிக் கட்சிகள் இணங்கி கைச்சாத்திட்டுள்ளன.

0 Responses to மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத்தை இலங்கையில் நிறுவி கண்காணிக்க வேண்டும்; ஐ.நா.வுக்கு கூட்டமைப்பு கடிதம்!