பொது மக்களின் காணிகளை எந்தக் காரணம் கொண்டும் அரசு ஆக்கிரமித்தோ, பிடித்தோ வைத்திருக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
“மக்களின் காணிகளை அரச படையினர் ஆக்கிரமித்துள்ளமை மனித உரிமை மீறலாகும். இலங்கைக்கு பொறுப்புக்கூறல் விடயங்களுக்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இன்னும் 2 வருட கால அவகாசம் வழங்கப்படுமோ இல்லையோ தெரியாது. ஆனால், எமது மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு இன்னும் 2 வருடங்கள் காத்திருக்க முடியாது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காணி விடுவிப்பு தொடர்பில் ஒத்திவைப்புப் பிரேரணையொன்றை பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை முன்வைத்து உரையாற்றும் போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகளை இராணுவம் உள்ளிட்ட முப்படையும் ஆக்கிரமித்து வைத்திருக்கின்றது. அதற்கு தேசிய பாதுகாப்பினை காரணம் காட்டுகின்றனர். ஆனால், அதனை ஏற்க முடியாது. எமது மக்கள் சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர்ந்து வேறு வேறு இடங்களில் நெருக்கடிக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.
தேசிய பாதுகாப்பினைக் காரணங்காட்டி எமது மக்களின் காணிகளை ஆக்கிரமித்துள்ள இராணுவத்தினர், அந்த நிலங்களில் தோட்டம் செய்கின்றனர். பொழுது போக்கு இடங்களை அமைக்கின்றனர். வியாபாரம் செய்கின்றனர். அந்த நிலத்துக்கு சொந்தமான மக்கள் வீதியில் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். ஆகவே, மக்களின் காணிகளை உடனடியாக விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to பொது மக்களின் காணிகளை எந்தக் காரணம் கொண்டும் அரசு பிடித்து வைத்திருக்க முடியாது: சம்பந்தன்