வடக்கு மாகாண விவசாய அமைச்சின் கீழுள்ள அம்மாச்சி உணவகத்துக்கு சிங்களத்தில் பெயர் வைக்குமாறு மத்திய அரசாங்கம் அழுத்தம் கொடுப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் அம்மாச்சி உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரிலும் அம்மாச்சி உணவகத்தை ஆரம்பிப்பதற்காக மத்திய அரசாங்கத்திடம் வடக்கு மாகாண விவசாய அமைச்சு நிதியுதவி கோரியிருந்தது.
இந்த நிலையிலேயே, சிங்களத்தில் பெயர் வைக்குமாறு நிதியுதவியை காரணங்காட்டி மத்திய அரசாங்கம் அழுத்தம் வழங்குவதாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசத்தில் தமிழிலேயே பெயர் வைக்க முடியும். அப்படியான நிலையில் சிங்களத்தில் பெயர் வைக்கக் கோருவது முறையல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to அம்மாச்சி உணவகத்துக்கு சிங்களத்தில் பெயர் வைக்குமாறு அரசாங்கம் அழுத்தம்; சி.வி.விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு!