உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கலப்பு முறையிலேயே நடைபெறும். ஆனாலும், தேர்தல் எப்போது நடைபெறும் என்பதை பாராளுமன்றமே தீர்மானிக்கும் என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “எல்லை மீள்நிர்ணய விவகாரம்போல் அல்லாமல் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விடயத்தில் நாம் கரிசனையுடன் செயற்பட்டு வருகின்றோம். இது தொடர்பில் எனக்கு இருந்த பொறுப்பை நான் நிறைவேற்றி விட்டேன். இனியும் இது தொடர்பில் என் மீது யாரும் குற்றம்சாட்ட முடியாது.
பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 உறுப்பினர்களதும் தீர்மானத்துடனேயே இதற்கான முடிவு இனி எட்டப்படும். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 100க்கு 70 வீதம் தொகுதி வாரியாகவும் 100க்கு 30 வீதம் விகிதாசார ரீதியாகவும் நடத்துவதாகவே ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும், சிறுபான்மை கட்சிகளின் வேண்டுகோளுக்கிணங்க இதில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு 100க்கு 60 வீதம் தொகுதிவாரியாகவும் 100க்கு 40 வீதம் விகிதாசார ரீதியாகவும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இந்தளவு காலம் தாழ்த்தப்படுவதற்கு எந்தவகையிலும் நான் பொறுப்பாளி அல்ல. கடந்த அரசாங்கத்தில் அப்போதைய அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் விருப்பத்திற்கு இணங்க அமைச்சர் அதாவுல்லா தன்னிச்சையான முடிவுகளை எடுக்க நேர்ந்தது. இதுவே தேர்தல் காலம் தாழ்த்தப்படுவதற்கு காரணமானது.
குறித்த சட்டமூலத்தில் எல்லை நிர்ணயம் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளதால் அதற்கிணங்கவே செயற்பட வேண்டியுள்ளது. எல்லை மீள்நிர்ணய அறிக்கையை நான் 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்தேன். இது வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பின்னர் அரசியல் கட்சிகளின் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியது.
இதற்கிணங்க எந்த ஒரு கட்சியும் நான் மேன்முறையீடு செய்தமை தொடர்பில் என் மீது குற்றம்சாட்டவில்லை. எல்லோருமே குறித்த எல்லை நிர்ணய அறிக்கைக்கு இணங்க தேர்தல் நடத்தப்படக்கூடாது என்றே தெரிவித்தனர். நான் மக்களின் கருத்துக்களுக்கு செவிமடுத்து மேன்முறையீடு வரை சென்றேன்.” என்றுள்ளார்.

0 Responses to உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கலப்பு முறையில் நடைபெறும்: பைஸர் முஸ்தபா