1967ல் பரகு விசாலட்சிக்கு மகனாக பிறந்த தமிழ்ச்செல்வன் 1984ல் விடுதலை புலிகள் இயக்கத்தில் தன்னை ஒரு போராளியாக இணைத்துக் கொண்டபோது இயக்கம் வைத்த பெயர் தினேஷ். போராளியாக போர் களங்களில் நின்றவருக்கு பயிற்சி தந்து வளர்த்ததெல்லாம் புலனாய்வுத்துறை பொட்டம்மன். இயக்கத்தில் போராளிகளுக்கு பயிற்சி தந்தபோது போராளிகள் ஓடி ஓடி பயிற்சி எடுத்தபோது, தினேஷ் மட்டும் நடந்தே சென்று பயிற்சி எடுத்தவர். பொன்னம்மன் முன் சாதாரணமாக தனது திறமைகளை காட்டியவருக்கு முதலில் மருத்துவபணி கிடைத்தது. பின் பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய பாதுகாவலராக மாறியது முதல் கடுமையான பயிற்சிகள் செய்யவேண்டியதாயிற்று. பிரபாவுக்கு பாதுகாப்பு தரும் தளபதிகளான சொர்ணம், இம்ரான் பொறுப்பிலிருந்தார் தினேஷ்.
1986ல் பிரபாகரன் தமிழகத்தில் இருந்தபோது உடன் மெய்ப்பாதுகாவலராக இருந்தவர் தமிழ்ச்செல்வன். பிரபாகரன் தமிழீழம் திரும்புவதற்க்காக திட்டமிட்டபோது தமிழீழம் போய் கள நிலவரம் அறிய அனுப்பி வைக்கப்பட்டவர் தினேஷ்.
1987 யாழ் மாவட்ட மகளிர் பிரிவு சுதந்திர பறவைகள் பெயரில் அரசியல் சமூக பணியில் விடப்பட்டிருந்தது. அவர்களுக்கு பயிற்சி தர பிரபாகரன் எண்ணியபோது பயிற்சி வேலைகளை செய்தவர் தினேஷ். தொடர்ந்து தென்மராட்சி பொறுப்பாகயிருந்த கேடில்சின் வீரச்சாவை தொடர்ந்து தென்மராட்சி பொறுப்பாளரானர் தினேஷ். அதோடு இந்திய படையெடுப்பின் போது பிரபாவின் மனைவி மதிவதனியையும், இரண்டு பிள்ளைகளையும் பாதுகாக்கும் பொறுப்பு தினேஷ்-க்கு வந்தது.
இந்திய அமைதிப்படை – விடுதலை புலிகளின் மோதலின் போது ஒருவேளை நான் இறந்தால் என் உடல் கூட எதிரிக்கு கிடைக்க கூடாது என தமிழ்ச்செல்வனிடம் கூறியுள்ளார். அதனால் எப்போதும் பிரபாகரன் பின்னால் மண்ணெண்ணய் கேனுடன் சுற்றி வந்தவர். இந்திய படைகளை எதிர்த்து சிறப்பாக போரிட்டதால் தினேஷ் போரில் தனது காலை இழந்தார். அதன்பின் படையின் கட்டளை தளபதியாக செயல்பட ஆரம்பித்தார். பல சமர்களில் கட்டளை தளபதியாக செயல்பட்டு வெற்றிகளை பெற காரணமாக இருந்தார். ஓயாதஅலைகள் 3ன்போது தென்மராட்சி மீட்பு வியூகத்தில் கட்டளை தளபதியாக இருந்து போராளிகளை வழிநடத்தினார்.
மாத்தையா இறப்புக்குப்பின் மக்கள் முன்னணியை கலைத்த புலிகள், அரசியல் துறையை மாற்றி அமைத்து அதிக அதிகாரம் தந்தது புலி தலைமையின் மையக்குழு. அதன் பொறுப்பாளராக தினேஷ் (எ) தமிழ்ச்செல்வன் நியமிக்கப்பட்டார். பிரபாகரனால் நேரடியாக வளர்க்கப்பட்டவர் என்பதால் சிறப்பாக தன் பணிகளை செய்ய ஆரம்பித்தார் தமிழ்ச்செல்வன். 1995ல் சந்திரிகாவுடனான பேச்சுவார்த்தையின் போது தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளரான தமிழ்ச்செல்வன், பாலசிங்கத்தோடு புன்முறுவலோடு பணிகளை கவனித்தார். தமிழீழ பகுதிகளில் உள்ள மக்களை சந்திப்பார் மக்களின் பிரச்சனைகளை பேசி தீர்ப்பார். செய்தி பணி, போர்ப்பணி, வெளிநாட்டு தொடர்பு, தளபதிகள் சந்திப்பு ஏன ஓய்வில்லாமல் சுற்றினாலும் தன் சிரிப்பை மட்டும் முகத்திலிருந்து விலக்காத புன்னகை மன்னன்.
2007 நவம்பர் 2 அதிகாலை 6 மணி அரசியல் ஆலுவலகத்தில் தனது உதவியாளர் லெப்.கர்னல் அன்புமணி எ அலெக்ஸ் எ முத்துக்கமார் சௌந்தரகிருஷ்ணன், மேஜர் நிகுந்தன் எ கருணாநிதி வசந்தகுமார், கேப்டன் நேதாஜி எ கலையரசன், லெப்டினல்கள் ஆட்சிவேல் எ பஞ்சாட்சரம் கஜீபன், வாகைக்குமரன் எ முத்துக்குமாரகுருக்கள், மேஜர் செல்வம் ஆகியோருடன் பணிகளை காணவந்த விடுதலைப்புலிகளின் சமாதான புறா பேச்சுவார்த்தை நாயகன் புன்னகை மன்னன் தமிழ்ச்செல்வனை ராணுவ விமான படை குண்டு வீசியதால் 4 போராளிகளோடு வீரமரணம் அடைந்தார்.
அதனை மற்ற போராளிகள் பிரபாகரனிடம் சொன்னபோது நம்பாமல் அழுதுவிட்டார். தகவல் உறுதியென அறிந்து அதனை புலிகளின் தலைமை நிலைய செயலாளர் சோ.சீரன் அறிவித்தபோது உலகமே நம்ப முடியாமல் கண்ணீர் விட்டது, உலக நாடுகள் கண்டனங்களை வீசியது. அப்போது தமிழக முதல்வராக இருந்த கலைஞரும் கண்ணீர் அஞ்சலி கவிதை எழுதி வெளியிட்டார். தமிழர்களும், உலக அரசியல் அறிஞர்களும், அமைதி விரும்பிகளும் கண்ணீர் விட்டனர். ஆனால் பெண் போராளியான தமிழ்ச்செல்வனின் மனைவி சசிரோஜா கண்ணீரை கண்களில் காட்டாமல் மனதுக்குள் அழுதார். அவருக்கு அமைப்பின் எல்லா தரப்பு தளபதிகளும் ஆறுதல் சொன்னபோது கலங்காமல் கள ஊடுப்பில் கணவனின் உடலருகே நின்றார் தமிழ்ச்செல்வனின் மனைவி சசிரோஜா. இறுதி சடங்கில் தமிழ்ச்செல்வனின் 7 வயது மகள் அலைமகள் கண்ணீர் விடாமல் கம்பீரமாக நடைபோட்டார். தமிழ்க்கு ஒளிவேந்தன் என்ற மகனும் உண்டு.
ராஜ்ப்ரியன்
nakkheeran
nakkheeran
0 Responses to அறிந்துகொள்வோம் தினம் ஒரு வரலாறு! | நவம்பர் 2 – தமிழீழ ராஜதந்திரியை அறிவோம்