Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரதமர் பதவி அல்லது எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஆகியவற்றில் ஒன்றைத் தருவதாக இணங்கினால் மாத்திரமே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோடு இணைவது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளுக்கு வரத் தயார் என்று கூட்டு எதிரணி (மஹிந்த அணி), ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நிபந்தனை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூட்டு எதிரணியின் கூட்டம் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. இதன்போதே, மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தமது இந்த நிபந்தனை தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு விளக்கமளிப்பதற்காக கூட்டு எதிரணி, சி.பி.ரத்னாயக்க, பவித்ரா வன்னியாரச்சி மற்றும் மகிந்த யாப்பா அபேவர்தன ஆகியோரை நியமித்துள்ளது.

0 Responses to பிரதமர் பதவி தருவதாக இருந்தால் பேச்சுக்கு வருகிறோம்; மைத்திரிக்கு மஹிந்த அணி நிபந்தனை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com