Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், எதிர்வரும் சனிக்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழு விசேட கலந்துரையாடலொன்றை நடத்தவுள்ளது.

நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் எந்தவித கருத்தையும் தற்போது கூற முடியாது என்றும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்களின் எல்லைகள் மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை வரையறை செய்து, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு டிசம்பர் 4 வரை இடைக்காலத் தடையுத்தரவு மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் நேற்று பிறப்பிக்கப்பட்டது.

மேற்படி வர்த்தமானி அறிவித்தலின் அடிப்படையிலேயே உள்ளூராட்சி மன்றங்களுக்கு எதிர்வரும் ஜனவரி மாத இறுதியில் தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்திருந்தது. எதிர்வரும் 27ஆம் திகதி வேட்புமனுக்களைக் கோரும் அறிவிப்பை வெளியிட தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், மேல்முறையீட்டு நீதிமன்றம், வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படுவது பிற்போடப்படும் சூழல் எழுந்துள்ளது.

0 Responses to உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு விசேட கலந்துரையாடல்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com