ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜெ.தீபா தாக்கல் செய்த வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 21ஆம் தேதி நடைபெறுகிறது. அதில் பதிவாகும் வாக்குகள் 24ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும். இதனிடையே இடைதேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 131 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
ஆர்.கே.நகர் தேர்தலில் திமுக சார்பில் மருதுகணேஷ், அதிமுக சார்பில் மதுசூதனன், டிடிவி தினகரன், விஷால், ஜெ.தீபா உள்ளிட்ட 131 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த வேட்புமனுக்களின் மீது இன்று காலையில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தலைமையில் விசாரணை நடந்தது. இதில் ஒரு வேட்பாளருக்கு இருவர் என்கிற கணக்கில் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
அதிமுக வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க வேட்பாளர் மருது கணேஷ், டி.டி.வி தினகரன் ஆகியோரது வேட்புமனுக்கல் ஏற்கப்பட்டுள்ளன. ஜெ.தீபா உள்ளிட்ட 25 சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்கள் முறையாக தகவல்கள் இல்லாத காரணத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளன.

0 Responses to ஜெ.தீபாவின் வேட்பு மனு நிராகரிப்பு!