உலகளாவிய ரீதியில் விழிப்புணர்வு ஏற்பட்டு இரசாயனங்களின் பாவனை மீதான தடை அதிகரிக்கப் பட்டதற்கு நல்ல பலன் கிடைத்து வருவதாக நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது அண்டார்டிக் கண்டத்தின் மேலே உள்ள ஓஷோன் மண்டலத்தில் (Ozone layer) ஏற்பட்ட ஓட்டைகள் அடைபட்டு அது இரசாயனங்களின் தாக்கத்தில் இருந்து விடுபட்டு வருவதற்கு ஆதாரம் கிடைத்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
விளக்கமாகக் கூறினால் மனித இனத்தின் இரசாயனங்களின் பாவனை காரணமாக எமது வளிமண்டலத்தில் CFC எனப்படும் குளோரின் வாயுக்களது வீதம் அதிகரித்ததால் ஒஷோன் மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டது. சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களைத் தடுத்து நிறுத்தி உயிரினங்களுக்குப் பாதுகாப்பு அரணாகத் தொழிற்படும் ஓஷோன் மண்டலம் புவி முழுதும் சுற்றியுள்ளது. இதில் அண்டார்ட்டிக்காவின் மீதுள்ள படலத்தில் ஓட்டை ஏற்பட்டது அவதானிக்கப் பட்டது. இதனால் ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக 1989 ஆம் ஆண்டு மொண்ட்ரியலில் CFC வாயுக்களை வெளியிடும் அனைத்து இரசாயனங்கள் மற்றும் உபகரணங்களைது பாவனைக்கு உலகளாவிய ரீதியில் தடை விதிக்கப் பட்டு ஒப்பந்தம் அமுலானது. தற்போது இதற்கே இந்தப் பலன் கிடைத்துள்ளது.
மேலும் கடந்த வருடம் செய்மதியின் அவதானப்படி 2060 ஆம் ஆண்டுக்குள் ஓஷோன் மண்டலம் முற்றிலும் வழமைக்குத் திரும்பி விடும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. 1989 ஒப்பந்தத்துக்கு முதல் ஓஷோன் மண்டலத்தில் ஓட்டையை ஏற்படுத்தும் CFC வாயுக்களை வெளிவிடும் முக்கிய உபகரணங்களாக ஏரோசோல்ஸ், குளீரூட்டிகள் (fridges), வளிப் பதனாக்கிகள் (air conditioner) போன்றவை விளங்கின. தற்போது இவை CFC இனை வெளியிடாத விதத்தில் தான் தயாரிக்கப் படுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் 2005 ஆம் ஆண்டு முதல் ஓஷோன் அடுக்கில் ஏற்பட்ட ஓட்டையினை நாசாவின் ஔரோ செய்மதி தொடர்ந்து அவதானித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது. ஓஷோன் அடுக்கால் தடுக்கப் படும் சூரியனின் புற ஊதாக் கதிர்கள் பூமியில் உள்ள உயிரினங்களைத் தாக்கினால் மனிதர்களுக்கு தோல் புற்று நோய் மற்றும் நோய்த் தடுப்பு பொறிமுறையில் பாதிப்பு ஏற்படும் என்பதுடன் ஏனைய தாவர இனங்களது கலங்களையும் பாதிக்கச் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஓஷோன் மண்டலத்தில் ஏற்பட்ட ஓட்டைகள் மெல்ல அடைபட்டு வருகின்றன : நாசா உறுதி