Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தீவிரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தானின் பங்களிப்பை அமெரிக்கா மறந்து விட்டது என மும்பைத் தாக்குதல் சூத்திரதாரியான ஹஃபீஸ் சயீட் தெரிவித்துள்ளார். இது குறித்த தகவல் பாகிஸ்தானின் நவா ஈ வாக்ட் என்ற பத்திரிகையில் வெளியாகி உள்ளது. அதில் தீவிரவாதத்துக்கு எதிரான போரில் எமது அனைத்து தியாகங்களையும் அமெரிக்கா மறந்து விட்டது எனவும் பாகிஸ்தான் அமெரிக்காவுக்கு ஆதரவளித்த போதும் இன்று அமெரிக்கா நமக்கே அச்சுறுத்தலாக விளங்குகின்றது எனவும் ஜமாத் உத் தவாஹ் கட்சித் தலைவனான ஹஃபீஸ் சயீட் 'அல் குட்ஸ்' மாநாட்டில் தெரிவித்ததாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும் சுமார் 20 மில்லியன் பாகிஸ்தானியர்களைத் தமது அடிமைகளாக ஆக்கும் விதத்தில் நிதியுதவி மற்றும் ஏனைய தடையுத்தரவுகள் மூலம் அமெரிக்கா அடைய நினைக்கும் இலட்சியம் நிறைவேறாது என்றும் சயீட் சாடியுள்ளார். நாம் இறைவனுக்கு மட்டுமே அஞ்சுவோம் எனவும் எமது தேசம் வலிமையானதும் மரியாதை மிக்கதும் ஆகும் என்றும் தெரிவித்த ஹஃபீஸ் சயீட் அமெரிக்காவின் ஆதரவோ உதவியோ உண்மையில் எமக்குத் தேவையில்லை என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா உட்பட சர்வதேசத்தின் அழுத்தத்திலும் கூட நீதிமன்றத்திலும் பல அரச பிரதிநிதிகளும் அதிகாரிகளும் தனக்குச் சார்பாக இருப்பதாகவும் தானும் தனது கட்சியும் பாகிஸ்தானுக்கு நண்மை அளிக்கும் விதத்தில் உள்ளதாகவும் ஹஃபீஸ் சயீட் தெரிவித்துள்ளார். இந்த அல் குட்ஸ் மாநாட்டில் பாகிஸ்தான் மனித உரிமைகள் அமைப்பின் முன்னால் சேர்மேன் ஆன ரியாஷ் ஃபட்யானா உம் உரையாற்றி இருந்தார். அண்மையில் தான் பாகிஸ்தான் அரசு சயீட் இனது ஜமாட் உத் தவா மற்றும் ஃபலாஹ் இ இன்சானியட் அறக்கட்டளை ஆகியவை நிதியுதவி சேகரிப்பதற்குத் தடை விதித்திருந்தது.

ஹஃபீஸ்  சயீட் இனது கட்சியை ஐ.நா ஏற்கனவே தடை செய்துள்ள நிலையில் அமெரிக்காவும் இஸ்ரேலுக்கும் எதிராக ஜிஹாட் என்ற புனிதப் போரை நடத்துவதற்காக அனைத்து இஸ்லாமிய தேசங்களும் முன்வர வேண்டும் என சயீட் அழைப்பு விடுத்துள்ளார். இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமினை டொனால்ட் டிரம்ப் பிரகடனப் படுத்தியதற்கு ஒரு எதிர் வினையாகவே இந்த அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Responses to தீவிரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தானின் பங்களிப்பை அமெரிக்கா மறந்து விட்டது! : ஹஃபீஸ் சயீட்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com