Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியா மதசார்பற்ற நாடாக இருப்பதை மத்தியை ஆளும் பா.ஜ.க. விரும்பவில்லை என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாடு குளச்சலில் கடந்த 1ஆம் தேதி தொடங்கியது. மாநாட்டையொட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டம் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கேரள முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்றார்.

கூட்டத்தில் அவர் பேசியதாவது: “இந்தியாவில் முக்கியமான மாற்றத்திற்கு, முன்னேற்றத்திற்கு தமிழகம் முன்னுதாரணமாக திகழ்கிறது. குறிப்பாக முதலாளித்துவம் மற்றும் ஜாதி கொடுமைகளுக்கு எதிராக தமிழகம் தான் முதல் முறையாக போராட்டம் நடத்தி முன்னுதாரணமாக திகழ்கிறது. இதற்கு பெரியார் முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

மத்திய அரசுக்கு மக்கள் நலன் குறித்த சரியான பார்வை இல்லை. இந்தியா மதசார்பற்ற நாடாக இருக்க மத்திய அரசு விரும்பவில்லை. பிரிவினைவாத மோதல்களை ஊக்கப்படுத்தி வருகிறது. இந்துத்துவாவுக்கு எதிராக கருத்து கூறிய கவுரி லங்கேஷ் உள்பட அனைத்து எழுத்தாளர்களும் ஒரே பாணியில் கொலை செய்யப்படுகின்றனர். இது பாஜகவின் சகிப்பின்மையை காட்டுகிறது. காங்கிரஸ் அரசு பல ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருந்தது. அப்போது அதன் மக்கள்விரோத கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் காரணமாக மக்கள் வெறுப்படைந்து பாஜகவிற்கு வாக்களித்தனர். ஆனால் ஆட்சியில் கட்சி மட்டும் தான் மாறி உள்ளதே தவிர காங்கிரஸ் அரசு பின்பற்றிய அதே கொள்கைகளை தான் பாஜக அரசும் பின்பற்றி வருகிறது.

தற்போதைய பாஜகவின் மத்திய பட்ஜெட்டை பிஎம்எஸ் தொழிற்சங்கமே அங்கீகரிக்கவில்லை. கடந்த ஓகி புயலால் கடலோர மக்கள் தங்களின் வாழ்வாதாரமான படகுகள், வலைகள் போன்றவற்றை இழந்து தவிக்கின்றனர். அவர்களின் துயரத்தை மக்களோடு இணைந்திருக்கும் அரசுதான் புரிந்து கொள்ள முடியும். கேரள பட்ஜெட்டில் ஓகி புயல் மறு சீரமைப்புக்காக 2 ஆயிரம் கோடி ஒதுக்கி அறிவித்துள்ளோம்.” என்றுள்ளார்.

0 Responses to இந்தியா மதசார்பற்ற நாடாக இருப்பதை பா.ஜ.க. அரசு விரும்பவில்லை: பினராயி விஜயன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com