Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எந்த அர்த்தமும் இல்லாமல் வெற்று வார்த்தைகளை மட்டுமே பேசும் முதல் இந்திய பிரதமர் நரேந்திர மோடிதான் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நாகாலாந்து அமைதி ஒப்பந்தம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்., தலைவர் ராகுல், பிரதமர் மோடியை கடுமையாக தாக்கி பேசி உள்ளார்.

நாகாலாந்து அமைதி ஒப்பந்தம் தொடர்பாக டுவிட்டரில் மோடிக்கு கேள்வி எழுப்பி உள்ளார் ராகுல். டுவிட்டரில் ராகுல் பதிவிட்டுள்ள கருத்தில், 2015 ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாகாலாந்து அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் மோடி புதிய வரலாற்றை படைத்தார். 2018 பிப்ரவரி மாதம் வரை அந்த ஒப்பந்தம் கையெழுத்தான நிலையிலேயே உள்ளது. எந்த முன்னேற்றமும் இன்றி அந்த ஒப்பந்தம் அப்படியே உள்ளது. எந்த அர்த்தமும் இல்லாமல் வெற்று வார்த்தைகளை மட்டுமே பேசும் முதல் இந்திய பிரதமர் மோடி தான் என குறிப்பிட்டுள்ளார்.

நாகாலாந்தில் நிலவி வரும் கிளர்ச்சிகளுக்கு ஒரு தீர்வு கண்ட பிறகு நாகாலாந்து சட்டசபை தேர்தலை நடத்தலாம் என பல்வேறு நாகா அமைப்புக்களும், அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வரும் நிலையில் ராகுல் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நாகாலாந்து கிளர்ச்சிகளை முடிவுக்கு கொண்டு வருவதற்காக நாகாலாந்து தேசிய சோசலிச கழகத்துடன் பிரதமர் மோடி 2015 ல் இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

0 Responses to அர்த்தமற்ற வெற்றுப் பேச்சுக்கள் பேசும் இந்தியாவின் முதல் பிரதமர் மோடி; ராகுல் காந்தி விமர்சனம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com