Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பாகிஸ்தானில் முக்கியமாக தெற்கே கராச்சி மாவட்டம் உட்பட பல பகுதிகளில் 44 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக வெயில் கொளுத்தி வருகின்றது. அதிகபட்சமாக அங்கு 111 டிகிரிக்கு வெயில் சுட்டெரித்துள்ளது.

இதனால் கடந்த 3 நாட்களில் மட்டும் 65 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கடும் வெயில் தொடர்வதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப் படுகின்றது.

பாகிஸ்தானில் தற்போது புனித ரமடான் மாதம் என்பதால் பெரும்பாலான முஸ்லிம்கள் அங்கு பகற் பொழுதில் உண்பதோ அல்லது நீர் அருந்துவதோ இல்லை. ஏற்கனவே சராசரியாக 44 டிகிரிக்கு வெயில் கொளுத்துவதால் இவர்கள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். வெயிலுக்குப் பலியானவர்களில் பலர் நகரங்களில் வாழும் வீடற்ற வறியவர்கள் ஆவர். 2015 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் வெப்பக் கனல் காரணமாக குறைந்தது 1300 பேர் முக்கியமாக வயோதிகர்களும் நோய் வாய்ப் பட்டவர்களும் பலியாகி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சிறிலங்காவிலோ இதற்கு மாறாக மான்சூன் காரணமாக பலத்த மழையும் வெள்ளப் பெருக்கும் மண் சரிவு அபாயமும் ஏற்பட்டு வருகின்றது. இதுவரை கனமழைக்கு 5 பொது மக்கள் பலியானதாக அறிவிக்கப் பட்டுள்ள போதும் தற்போது இது 9 ஆக உயர்ந்துள்ளது. 38 000 பொது மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கும் மண் சரிவு அபாயமும் ஏற்பட்டு வருவதால் சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. அனர்த்த முகாமை அமைப்பின் தகவல் படி மின்னல் தாக்கி 3 பேரும், மண் சரிவில் ஒருவரும் மரம் விழுந்து ஒருவரும் மரணித்ததாக அறிவிக்கப் பட்டுள்ளது.

தென்னிலங்கையில் இருந்து கொழும்புக்கு வரும் முக்கிய அதிவேகப் பாதையில் பியகம மற்றும் கடுவளை பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் இதில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. புத்தளத்துக்கும் நீர்கொழும்புக்கும் இடையே உள்ள மாதம்பை முற்றிலும் வெள்ளத்தில்.

0 Responses to பாகிஸ்தானில் கடும் வெயிலுக்கும் சிறிலங்காவில் கடும் மழை வெள்ளத்துக்கும் பலர் பலி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com