Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தூத்துக்குடி ஆட்சியராக இருந்த வெங்கடேஷை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அவருக்கு பதிலாக நெல்லை ஆட்சியர் சந்தீப் நந்தூரி தூத்துக்குடி ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டிற்கு இரையாக இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். பலரும் எதிர்பாராத வகையில் நடைபெற்ற இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது.

தொடர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்தைக் கண்டிக்கும் விதமாகத் தமிழக அரசை எதிர்க்கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் சாடி வருகின்றன. ஆனால், தவிர்க்க முடியாத சூழ்நிலையில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது என்றும், பலியானவர்களுக்கு 10 இலட்ச ரூபாய் நிதியும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என நிவாரணத்தை அறிவித்தது தமிழக அரசு.

மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்தது. எனினும், இதுகுறித்து சிபிஐ தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், எஸ்பி ஆகியோரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. துப்பாக்கிச் சூட்டை சரிவரக் கையாளவில்லை என்ற காரணத்தால் இவர்களை தற்போது தமிழக அரசு இடமாற்றம் செய்துள்ளது. இ

துகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தூத்துக்குடி ஆட்சியராக இருந்த வெங்கடேஷ் இடமாற்றம் செய்யப்பட்டு சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்குப் பதிலாக நெல்லை ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தூத்துக்குடி ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லை ஆட்சியராக ஷில்பா பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், தூத்துக்குடி எஸ்பியாக இருக்கும் மகேந்திரன் வட சென்னை ட்ராஃபிக் காவல்துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு அவருக்குப் பதிலாக நீலகிரி எஸ்.பி முரளி ரம்பா தூத்துக்குடி எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபியுடன் ஆலோசனை நடத்திய பின் இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

0 Responses to தூத்துக்குடி ஆட்சியர் வெங்கடேஷ் இடமாற்றம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com