Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியாவின் இமய மலைத் தொடர் பகுதியில் உள்ள புனித ஸ்தலமான மானஸ்வரூவருக்கு தீர்த்த யாத்திரை சென்ற 1500 இற்கும் அதிகமான யாத்தீரிகர்கள் அங்கு நிலவும் மோசமான கால நிலையால் முன்னேறவும் வெளியேறவும் முடியாது அகப்பட்டுக் கொண்டுள்ளனர்.

காலநிலை மிகவும் சீரற்ற நிலையில் இருப்பதால் விமானங்கள் மூலம் இவர்களை மீட்கும் வாய்ப்பும் மிகக் குறைவாக இருப்பதாகக் கவலை தெரிவிக்கப் பட்டுள்ளது.

இது தொடர்பில் காத்மண்டுவில் இருக்கும் இந்தியத் தூதரகம் இறுதியாக தெரிவித்த தகவலில் கிட்டத்தட்ட 525 யாத்திரீகர்கள் சிமிகொட் இலும், 550 யாத்திரீகர்கள் ஹில்சா இலும் மேலும் 500 பேர் வரை திபேத் பகுதியிலும் அகப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் பல ஆயிரக் கணக்கான மக்கள் நேபால் வழியாக கைலாஷ் சிகரம் இருக்கும் மனஸ்வரூவர் ஏரியில் மிக அற்புதமான ஆன்மிக அனுபவத்தைப் பெறுவதற்காக விஜயம் செய்து வருகின்றனர். சிலவேளை மோசமான காலநிலையால் இதில் சிலர் மாட்டிக் கொள்வதும் வழக்கமே ஆகும். ஆனால் இம்முறை பெய்த கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட மண் சரிவு யாத்திரை செல்லும் பாதையைத் துண்டித்துள்ளதால் தான் இந்த அபாய நிலை தோன்றியுள்ளது.

தற்போது இந்தியத் தூதரக பிரதிநிதிகள் சிலர் இந்த யாத்திரைக்குச் செல்லும் நெப்பல்கான்ஜ் மற்றும் சிம்கோட் பகுதியில் தனியே மாட்டிக் கொண்ட யாத்திரீகர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் அவர்கள் அனைவருக்கும் தேவையான உணவு மற்றும் தங்கும் வசதிகளும் இருப்பாதாகவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்தியா மற்றும் நேபாலைச் சேர்ந்த விமானப் படை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் இவர்களை மீட்பது தொடர்பில் தீவிர கவனம் செலுத்தப் பட்டு வருகின்றது.

இது தவிர தனியே மாட்டிக் கொண்ட யாத்திரீகர்களின் உறவினர்கள் அவர்கள் தொடர்பில் விபரம் பெற பல ஹாட்லைன் தொலைபேசி இலக்கங்களையும் இந்திய அரசு அறிவித்துள்ளது.

0 Responses to மானஸ்வரூவர் யாத்திரையில் அகப்பட்டுக் கொண்ட 1500 யாத்திரீகர்களை மீட்கும் பணி தீவிரம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com