“இலங்கையின் நலன்களைக் காயப்படுத்தக் கூடிய எதையுமே,
இந்தியா செய்யாது. அதேபோல, ஒருபோதும் இலங்கைக்கு ஆணையிடுகின்ற போக்கிலும்
இந்தியா செயற்படாது. அது இந்தியாவின் அணுகுமுறையல்ல”.
என கடந்தவாரம் அரச சார்பு ஆங்கில வார இதழ்
ஒன்றுக்கு அளித்திருந்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் இலங்கைக்கான
இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா.
இவர் அடுத்தமாத நடுப்பகுதியுடன் கொழும்பிலிருந்து திரும்பவுள்ளார்.
அசோக் கே காந்தாவின் இந்தக் கருத்தும், அண்மையில் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்பட்ட காலப் பகுதியில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் வெளியிட்ட கருத்தும் ஒத்துப்போகின்றன.
இலங்கையுடன் பெரியண்ணன் போக்கில் இந்தியா நடந்து கொள்ளாது என்று அவர் திரும்பத் திரும்ப பல்வேறு சந்தர்ப்பங்களில் கூறியிருந்தார்.
அவர் அவ்வாறு கூறியதற்குக் காரணம், இலங்கையின் உள்விவகாரங்களில் இந்தியா தலையிடாது என்பதே.
அதாவது, இந்திய வெளிவிவகார அமைச்சு இந்த விடயத்தில் தெளிவானதொரு நிலைப்பாட்டுல் உள்ளது என்பதை அசோக் கே காந்தா இப்போது கூறியுள்ள கருத்தும், சல்மான் குர்ஷித் முன்னர் வெளியிட்ட கருத்தும் உறுதிப்படுத்திகின்றன.
இலங்கை விவகாரத்தில், ஒரு எல்லையை இந்தியா வரையறுத்துக் கொண்டுள்ளது என்பது இதன் மூலம் உறுதியாகிறது. ஆனால், இந்தியா வகுத்துள்ள இந்த எல்லைக் கோடு எந்தளவுக்கு நடைமுறைச் சாத்தியமானது என்பது கேள்விக்குரிய ஒரு விடயமாகும்.
ஏனென்றால், இந்த எல்லைக் கோட்டு வரையறையை அரசாங்கங்களின் வெளிவிவகாரக் கொள்கைகளின் மூலம் தீர்மானித்து விட முடியாது. அதற்கு ஒரு உதாரணம், ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக இந்தியா அளித்த வாக்கைக் குறிப்பிடலாம்.
இது இலங்கை அரசுக்கு அதிரான வாக்கு அல்ல என்று இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறாயின், அது யாருக்கு எதிராக அளிக்கப்பட்ட வாக்கு? - இந்த விடயத்தில் இந்தியா தன்னைத்தானே குழப்பிக் கொள்கிறதா? அல்லது எல்லோரையும் குழப்ப முனைகிறதா? என்ற கேள்வி வருகிறது.
இலங்கை அரசுக்கு எதிராக வாக்களிக்க இந்தியா விரும்பவில்லை என்பது உண்மையே.
ஆனால், அதை நிறைவேற்றும் அதிகாரம் முற்றுமுழுதாக இந்திய வெளிவிவகாரக் கொள்கை வகுப்பாளார்களுக்கு இருக்கவில்லை. அதனால் தான் அவர்கள் வகுத்திருந்த எல்லையை கடந்து சென்று இந்தியா வாக்களிக்க நேர்ந்தது.
அதுபோலவே, ஆணையிடும் போக்கில், அதாவது அதிகாரத் தொனியுடன் இலங்கையுடன் இந்தியா நடந்துகொள்ளாது என்பதும், அது இந்தியாவின் அணுகுமுறையல்ல என்பதும் தெளிவான விடயமே.
ஏனென்றால், இலங்கையுடன் அதிகாரத் தொனியுடன் இந்தியா ஒருபோதும் நடந்து கொண்டதில்லை என்று கூறினால் அது தவறானது. இந்தியாவின் கடந்த கால வரலாறு அதற்கு மாறானது.
பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்தியா தனது அதிகாரத்தனத்தை இலங்கை மீது பிரயோகித்துள்ளது. அதற்கான சான்றாக தான், இந்திய - இலங்கை உடன்பாடு, 13வது அரசியலமைப்புத் திருத்தம், மாகாண சபைகள், இன்னும் பல உள்ளன.
ஆனால், இப்போது, அத்தகைய அதிகாரத்தைச் செலுத்துகின்ற நிலையில், இந்தியாவும் இல்லை, அதைக் கேட்கின்ற நிலையில் இலங்கையும் இல்லை.
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம், பதவிக்கு வந்த பின்னர், சீனாவுடன் ஏற்படுத்திக்கொண்ட நெருக்கம், இந்தியாவைப் பல வழிகளில் செயலற்ற நிலைக்குக் கொண்டு சென்று விட்டது. எங்கே தானும் அதிகாரத்தனத்துடன் நடந்து கொண்டால், சீனாவுடன் இலங்கை ஒரேயடியாக இணைந்து கொண்டு விடுமோ என்ற பயம் இந்தியாவுக்கு உள்ளது.
இதனை புதுடில்லியின் கொள்கை வகுப்பாளர்கள், அரசியல் ஆய்வாளர்கள், ஊடகங்கள் என்று எல்லோருமே ஏற்றுக்கொள்கிறார்கள். இலங்கைப் படையினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கக்கூடாது என்ற சர்ச்சை வலுத்தபோது, இந்த பயத்தை பலதரப்பட்ட இந்தியத் தரப்பினரும் முன் வைத்திருந்தனர்.
இதன் காரணமாகத் தான், இலங்கை விடயத்தில் ஒரு எல்லைக்கோட்டை இந்தியா வகுத்து வைத்திருக்கிறதேயின்றி, இந்திய இலங்கை உறவுகளின் நெருக்கத்தினால் அல்ல. இலங்கையின் நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எதையும் இந்தியா செய்யாது என்ற இந்தியத் தூதுவரின் வாக்குறுதியின் அடிப்படை இது தான். ஆனாலும், அவ்வப்போது இருநாடுகளுக்கும் இடையில் முரண்பாடுகள் வருவதையும் இன்னொரு சந்தர்ப்பத்தில் அசோக் கே காந்தா அண்மையில் சுட்டிக் காட்டியிருந்தார் என்பதையும் கவனத்தில் கொள்ளலாம்.
அந்த முரண்பாடுகள் ஏற்படும் சந்தர்ப்பம் தான், புதுடில்லி வரைந்து வைத்துள்ள எல்லைக்கோட்டுக்கு சவாலானது. இத்தகைய சவால்களை இந்தியா வரும் நாட்களில் அதிகளவில் சந்திப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.
ஏனென்றால், வட மாகாண சபைத் தேர்தலை நடத்துவது மற்றும், மாகாண சபைகளின் அதிகாரங்களைப் பறிப்பது தொடர்பான விடயங்களில், இலங்கை அரசாங்கம் பாரிய சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. வடக்கில் தேர்தலை நடத்துவதானால் அதற்கு முன்னர், மாகாணங்களின் காணி, பொலிஸ் அதிகாரங்களைப் பறிக்க வேண்டும் என்றும் கூட்டணிக் கட்சிகள் அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றன.
சிங்களத் தேசியவாத சக்திகளின் இந்த எதிப்பை அரசாங்கம் எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்பது முக்கியமான விடயம். ஏனென்றால், இலங்கை அரசாங்கத்துக்குக் கூட, வடக்கில் மாகாண சபத் தேர்தலை நடத்துவதிலோ, காணி, பொலிஸ் அதிகாரங்களை விட்டு வைப்பதிலோ உடன்பாடு இல்லை.
இந்த நிலையில் அரசியலமைப்பில் திருத்தம் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகின. பின்னர், இந்தியாவுக்கு கொடுத்த வாக்கை மீறியதாக விடும் என்றும், அதனால் இந்தியா கொமன்வெல்த் மாநாட்டுக்கு அளுத்து வரும் ஆதரவை விலக்கிக் கொண்டு விடலாம் என்பதாலும், அரசியலமைப்பைத் திருத்தும் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இப்போது, அரசாங்கத்துடன் இணைந்துள்ள ஜாதிக ஹெல உறுமய இந்த அரசியலமைப்புத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் போவதாக செய்திகள் வருகின்றன. இது, அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளிவிட ஹெல உறுமய போடும் திட்டமா? அல்லது அரசாங்கமும், ஹெல உறுமயவும் சேர்ந்து இந்தியாவை முட்டாளாக்குவதற்காக போட்டுள்ள திட்டமா? என்பது விரைவிலேயே வெளிச்சமாகும்.
எது எவ்வாறாயினும், இது இந்தியாவுக்கு தலைவலியைக் கொடுக்கத்தக்க, நெருக்கடியுல் தள்ளிவிடக் கூடிய ஒன்று என்பதில் சந்தேகமில்லை.
இலங்கையுடன் அதிகாரப்போக்குடன் செயற்பட விரும்பாத - அதற்கான எல்லையைத் தாண்ட விரும்பாத இந்தியாவைச் சீண்டிப் பார்க்கின்ற விவகாரம் இது. இந்திய - இலங்கை உடன்பாட்டுக்கு அமைய கொண்டு வரப்பட்ட 13ஆவது திருத்தத்தின் கீழ் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள காணி, பொலிஸ், அதிகாரங்களை பறிப்பதற்கு எத்தகைய வழியிலேனும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டால் அதை இந்தியா பொறுத்துக் கொண்டிருக்கப் போகிறதா? என்பதே இப்போதுள்ள கேள்வி.
உள்நாட்டு விவகாரம் என்று இதனை ஒதுக்கி வைத்து விட்டு இந்தியா இருந்து கொண்டால், தான் வகுத்துள்ள எல்லையைத் தாண்ட வேண்டிய அவசியம் இல்லை. மாறாக, தனக்கு கொடுத்த வாக்குறுதிகளை இலங்கை மீறுகிறது என்று தெரிந்த நிலையில், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான அடிப்படையாக கருதும் விடயத்தில் இலங்கை அரசு கைவைக்கிறது என்று தெரிந்த நிலையில், அதைக் கண்டும் காணாமல் விட்டு விடமுடியாது என்று இந்தியா கருதினால், அந்த எல்லைக் கோட்டை இந்தியா தாண்டியாக வேண்டும்.
அதாவது அந்த முயற்சிகளைத் தடுத்து நிறுத்துவதற்கு இலங்கையுடன் அதிகாரப் போக்குடன் நடந்து கொள்ள வேண்டிய நிலை இந்தியாவுக்கு ஏற்படும்.
இந்த நிலையில் இந்திய கொள்கை வகுப்பாளர்களின் எல்லைக் கோட்டுக்கு சோதனை அதிகமாகப் போகிறது என்பது உறுதியாகவே தெரிகிறது. வடக்கு மாகாண சபைத் தேர்தலும் அதையொட்டி எழுந்து வருகின்ற சூழலும், இலங்கை அரசுக்கு மட்டுமன்றி, இந்தியாவுக்கும் கூட ஒரு விஷப்பரீட்சையாகவே உள்ளது.
- ஹரிகரன் -

0 Responses to எல்லைக் கோட்டைத் தாண்டுமா இந்தியா? - ஹரிகரன்