புதிய அரசியலமைப்பானது, மாகாண சபைத் தேர்தல்களுக்கு முன்னர் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் விஜய் கோகெலுக்கும், இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதன்போதே, எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு எடுத்துக் கூறியுள்ளார்.
“பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றமையினால் இவ்வருட இறுதிக்குள் புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படுவது மிக அவசியமானதாகும். இந்தச் சந்தர்ப்பத்தை உதாசீனம் செய்ய முடியாது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to புதிய அரசியலமைப்பு மாகாண சபைத் தேர்தல்களுக்கு முன் நிறைவேற்றப்பட வேண்டும்: சம்பந்தன்