விடுதலைப் புலிகள் பலமாக இருந்த காலகட்டத்தில் கூட, அவர்களை எதிர்த்து நின்ற பலரை நாம் பார்த்திருக்கிறோம். தமது உறவினர்கள் மாற்று இயக்கத்தில் இருந்ததால்,மாவீரர் தினத்தை பகிஷ்கரிக்கும் பல தமிழர்கள் இன்றுவரை உள்ளார்கள். ஆனால் 2019ம் ஆண்டு (இம் மாவீரர் தினம்) பெரும் மாற்றம் ஒன்றை சந்தித்துள்ளதை அவதானிக்க முடிகிறது. காணமல் ஆக்கப்பட்டோர், பிற இயக்கங்களில் இருந்து சாவைத் தழுவிக் கொண்டவர்கள் என்று பலரும் இணைந்து இம்முறை மாவீரர் தினத்தில் கலந்து கொண்ட விடையம்.
உலகிற்கு ஒட்டுமொத்தமாக ஒரு செய்தியை சொல்லி நிற்கிறது. புலிகளால் அறிவிக்கபப்ட்ட மாவீரர் நாள், ஒட்டு மொத்த தமிழ் இனத்தின் துயர நாளாகவும். தமிழர்கள் அனைவரையும் ஒன்றினைக்கும் ஒரு நாள், மற்றும் எமது லட்சியப் பாதையை நான் எடுத்துச் செல்லவேண்டும் என்று, இளையோர்களுக்கு அறைகூவல் விடுக்கும் நாளாக அமைந்துள்ளது. லண்டன் எக்ஸெல் மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற மாவீரர் தினத்தில் 15,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொண்டு. ஒரு குடையின் கீழ், எமது கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்கள்.
தமிழர்களின் வலிகளை சுமந்து வரும் மாதமாக இது அமைந்துள்ளதோடு, பல தரப்பட்ட தமிழர்களை ஒன்றினைக்கும் ஒரு இயங்கு தளமாக மாவீரர் தினம் உருவெடுத்துள்ளது. தென்னிலங்கையில் சிங்களவர் ஒன்றினைந்து, தமது தலைவர் கோட்டபாய என முடிவெடுத்துள்ள நிலையில். புலம்பெயர் தமிழர்கள் மற்றும் தாயக தமிழர்கள் மாவீரர் நாளை என்றும் இல்லாதவாறு அனுஷ்டித்தமை, சிங்கள தேசத்திற்கு ஒரு செய்தியை சொல்லி உள்ளது. அது என்னவென்றால் தமிழர்களின் இறையாண்மை, சுய நிர்ணய உரிமை என்பன இன்றும் தோற்றுப் போகவில்லை என்பது தான் அதுவாகும்.

0 Responses to விடுதலைப் புலிகளை எதிர்பவர்கள் பெரும் அளவில் கலந்து கொண்ட மாவீரர் தினம் 2019