Showing posts with label Maaveerar Naal 2009. Show all posts
Showing posts with label Maaveerar Naal 2009. Show all posts
அமெரிக்காவில், நியூ ஜெர்சி மாநிலத்தில் தமிழீழ தேசிய மாவீரர் நாள்
பதிந்தவர்:
தம்பியன்
09 December 2009
முதலில் அமெரிக்க தேசியக் கொடியும், தமிழீழ தேசியக் கொடியும் ஏற்றிவைக்கப்பட்டது. இதனை அடுத்து மக்கள் நீண்டவரிசையில் காத்திருந்து மலர்கொண்டு மாவீரர்களுக்கு தமது அஞ்சலிகளைச் செலுத்தினர்.
பின்னர் மருத்துவர் எலீன் ஷாண்டர், மருத்துவர் சோம இளங்கோவன், மருத்துவர் தயாபரன் ஆகியோர் உரையாற்றினர். இம்முறை அமெரிக்காவின் பல மாநிலங்களில் குறிப்பாக நியூயார்க் (New York), போஸ்டன் (Boston), ஓஹையோ (Ohio), கலிபோர்னியா (California), ப்ளோரிடாவில் (Florida) மாவீரர்நாள் நிகழ்வு நடைபெற்றது.
மிகவும் ஆர்வத்துடனும் மிகவும் திறமையாகவும் அனைத்து போட்டியாளர்களும் கலந்து கொண்டனர். தகுதி வாய்ந்த நடுவர்களால் போட்டிகள் நடுவுநிலைமை வகிக்கப்பட்டு வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
குறிப்பாக பேச்சு, பாடல் திறன் போட்டிகளில் கலந்துகொண்ட போட்டியாளர்களின் மொழி வளமும் மொழிப்பற்றும் வருகை தந்திருந்தோரை உடல் சிர்க்கவைத்தது மேலும் தனி நடிப்புத்திறனில் அவர்கள் எடுத்துக்கொண்ட கதைக்கருவும் சிறுவர்களின் நடிப்பும் அனைவரது கண்களிலும் கண்ணீர் சிந்த வைத்ததோடு சிந்திக்கவும் தூண்டியது.
போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் மாவீரர் நினைவுப்பரிசில்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது. போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்றவர்களுக்கு மாவீரர் நாளன்று சினைவுப்பரிசும் சான்றிதளும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது. வெற்றியீட்டியவர்கள் மாவீரர் நாள் மேடையில் தமது படைப்புக்களை வழங்கியிருந்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை 29.11.2009 அன்று அமெரிக்கா, நியுயோர்க்கில் விடுதலை வேள்வியில் ஆகுதியாகிய மாவீரர்கள், பொதுமக்களை நெஞ்சிலே நிறுத்தி மாதிரி நினைவாலயத்தில் பூக்களைத் தூவி தங்கள் வணக்கத்தை தெரிவித்துக்கொண்டனர்.
இந்நிகழ்வில் பலநூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டதுடன், எழுச்சிநிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

























