மிகவும் ஆர்வத்துடனும் மிகவும் திறமையாகவும் அனைத்து போட்டியாளர்களும் கலந்து கொண்டனர். தகுதி வாய்ந்த நடுவர்களால் போட்டிகள் நடுவுநிலைமை வகிக்கப்பட்டு வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
குறிப்பாக பேச்சு, பாடல் திறன் போட்டிகளில் கலந்துகொண்ட போட்டியாளர்களின் மொழி வளமும் மொழிப்பற்றும் வருகை தந்திருந்தோரை உடல் சிர்க்கவைத்தது மேலும் தனி நடிப்புத்திறனில் அவர்கள் எடுத்துக்கொண்ட கதைக்கருவும் சிறுவர்களின் நடிப்பும் அனைவரது கண்களிலும் கண்ணீர் சிந்த வைத்ததோடு சிந்திக்கவும் தூண்டியது.
போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் மாவீரர் நினைவுப்பரிசில்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது. போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்றவர்களுக்கு மாவீரர் நாளன்று சினைவுப்பரிசும் சான்றிதளும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது. வெற்றியீட்டியவர்கள் மாவீரர் நாள் மேடையில் தமது படைப்புக்களை வழங்கியிருந்தனர்.




0 Responses to மாவீரர் நாள் கலைத்திறன் போட்டி 2009: பிரான்சு