ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தை குறுகிய அரசியல் தேவைகளுக்காகவோ இனவாத அல்லது மதவாத அடிப்படையிலோ பயன்படுத்துவது நாட்டின் எதிர்கால பயணத்துக்கு தடையாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் 47வது ஆண்டுநிறைவு நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “இன்றைய அரசாங்கம் அரச கொள்கைகளுக்கமைய சகல துறைகளிலுமான பொறுப்புக்களையும் கடமைகளையும் நிறைவேற்றி வருகிறது. நல்லாட்சி அரசாங்கம் தொடர்பில் நாட்டு மக்கள் கொண்டுள்ள எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியுள்ள அரசு, படிப்படியாக முன்னோக்கி பயணிக்கின்றது. ஒருசிலர் எதிர்பார்ப்பது போல் உடனடியாக தீர்வு காணமுடியாதபோதிலும் முறையான திட்டங்கள் மூலம் நாட்டினதும் மக்களினதும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் பாடுபடுகின்றது.
சுதந்திர சுகாதார சேவையை மேலும் பலப்படுத்துவமுடன் அத்துறையிலுள்ள அனைவரினதும் தொழில் சிறப்புரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது.” என்றுள்ளார்.

0 Responses to சுதந்திரத்தை இனவாத அடிப்படையில் பயன்படுத்துவது எதிர்கால பயணத்துக்கு தடை: மைத்திரிபால