Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐ.நா.பணியாளர்கள் இருவரை விடுவிப்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக சட்டத்தரணி ஒருவர் நியமிக்கப்படவுள்ளார்.

நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பேச்சாளர் மிக்கேலி மொண்டாஸ் இத்தகவலைத் தெரிவித்தார்.

சிறீலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இரண்டு பணியாளர்களும் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த பணியாளர்களை விடுவிப்பதற்காக சகல சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் மிக்கேலி மொண்டாஸ் தெரிவித்துள்ளார்.

தமது நிறுவன பணியாளர்கள் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ள சம்பவம் குறித்து இதுவரையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

0 Responses to ஐ.நா. பணியாளர்களை விடுவிக்க சட்டத்தரணிகள் நியமனம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com