Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ராஜபக்சேவின் அதிரடி முடிவு

பதிந்தவர்: தம்பியன் 15 September 2009

விடுதலைப்புலிகளுடன் போரிட்ட இலங்கை ராணுவத்துக்கு அதிக அதிகாரங்கள் கொடுக்கப்பட்டு இருந்தன. எனவே சிங்கள ராணுவம் அத்துமீறி நடந்து கொண்டது. ராணுவம் என்ன செய்தாலும் அதை அரசு தட்டிக்கேட்பது இல்லை என்ற நிலை இருந்தது.

இப்போது போரில் விடுதலைப்புலிகளுடனான போர் முடிவுக்கு வந்து விட்டது. எனவே ராணுவத்துக்கு வழங்கப்பட்டிருந்த அதிக அதிகாரங்களை குறைக்க அதிபர் ராஜபக்சே முடிவு செய்துள்ளார்.

ஏற்கனவே ராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு வழங்கியிருந்த அதிக அதிகாரத்தை குறைக்கும் வகையில் அவருக்கு கூட்டு படை தலைமை அதிகாரி என்ற புதிய பதவி வழங்கப்பட்டது.

இப்போது ராணுவத்துக்கு உள்ள மற்ற அதிகாரங்களை குறைக்க உள்ளார். இதன்மூலம் மக்களிடம் நல்ல பெயர் கிடைக்கும். இதனால் அதிபர் தேர்தலில் எளிதாக வெற்றி கிடைக்கும் என ராஜபக்சே கருதுவதாக கூறப்படுகிறது.

ஆனால் ராணுவ அதிகாரத்தை குறைக்க முடிவு எடுத்து இருப்பது ராணுவ தளபதிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

0 Responses to ராஜபக்சேவின் அதிரடி முடிவு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com