Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் ராணுவ வெற்றி ஏற்பட்டதன் பின் சில மாதங்களாகியும் அங்கு வேறுபாடுகளைக் களைந்து சமரசம் உருவாகுவதற்கான சூழலுக்கு கடுகளவு பெருந்தன்மையே உள்ளது என்றும் தொடர்ந்து லட்சக்கணக்கான மக்கள் முள்ளுக் கம்பிகளுக்குள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ள பிரிட்டன் கார்டியன் பத்திரிகை, இரு நாட்களில் வெளியிடப்பட்டுள்ள தனது இரண்டாவது கட்டுரையில், இவையெல்லாம் மீண்டும் ஒரு விடுதலை இயக்கத்தை தமிழர்கள் தோற்றுவிப்பதற்கான வித்து எனக் கூறியுள்ளது. இந்த கட்டுரை நேற்று முன் தினம் திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

கொழும்பு நகரம் முழுவதும் மகிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது இரு சகோதரர்களின் படங்களே விளம்பரப்படுத்தப்பட்டு ஒட்டப்பட்டுள்ளன. இந்த ஆரம்பநிலையிலுள்ள தனித்தன்மைக் கொள்கையானது சீன கம்யுனிசத்தையே மிஞ்சிவிடும் போலுள்ளது. கொழும்பில் கொண்டாடப்பட்டு வரும் இந்த வெற்றிக் களிப்பானது, அரசாங்கத்தை எதிர்த்து கேள்வி கேட்கும் அனைவவரும் புலிகளுடன் தொடர்பானவர்கள், புலிகளுக்கு ஆதரவளிப்பவர்கள் அல்லது தமிழ் பிரிவினைவாதிகள் என்ற கருத்தைச் சுட்டிக் காட்டுகிறது.

நன்றி: அதிர்வு

0 Responses to இலங்கையில் மீண்டும் ஒரு போராட்ட இயக்கம் மலரும் - கார்டியன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com