Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் சிறீலங்காப் படையினரின் சுற்றிவளைப்பு தேடுதலில் 7 தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு ,அம்பாறை மாவட்டங்களில் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்கள் தொடராக சிறீலங்காப் படையினரின் சுற்றிவளைப்பு தேடுதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இரவு வேளைகளில் சுற்றிவளைப்பு தேடுதலில் ஈடுபடும் சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மக்கள் பலரை விசாரணை செய்து வருகின்றார்கள்.

இந்நிலையில் கடந்த ஒருமாத காலப்பகுதியில் 7 தமிழ் இளைஞர்கள் சிறப்பு அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறீலங்காப்படையினரின் இச்செயற்பாடு தொடர்பாக தமிழ்மக்களால் தமிழ் தேசியக்கூட்டமைப்பிடம் முறையிடப்பட்டுள்ளது.

0 Responses to மட்டக்களப்பு அம்பாறையில் சிறீலங்காப் படையினர் சுற்றிவளைப்பு - 7 தமிழ் இளைஞர்கள் கைது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com