இலங்கையில் இறுதிப் போரின்போது சிறீலங்கா இராணுவம் அத்துமீறி நடந்து கொண்டதா என விசாரிக்க உத்தரவிட்டுள்ளார் மகிந்த ராஜபக்ச.
மே 2ம்திகதியும், 18திகதியும் 170 சம்பவங்களில் போர் குற்றங்கள் நிகழ்த்தப்பட்டதாக அமெரிக்க பாராளுமன்றத்தில் அதிகாரப்பூர்வ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், உலக நாடுகளும், ஐ.நா.சபையின் மனித உரிமை அமைப்பும் இந்த விடயத்தில் சிறீலங்காவை பகிரங்கமாக குற்றம் சுமத்தி உள்ளன.
சிறிலங்காவின் போர்க்குற்றங்களை பட்டியலிட்டுள்ள அமெரிக்கா , இது பற்றி சுயமான விசாரணை மேற்கொள்வது அவசியம் என்பதில் உறுதியாக நிற்கிறது. இதனால் சிறீலங்காவுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இறுதிப் போருக்கு தலைமை தாங்கி நடத்திய, கூட்டுப் படைத் தளபதி சரத் பொன்சேகா அமைதியாக போர்க்கொடி உயர்த்தி வருகிறார்.
அமெரிக்கா அளித்துள்ள போர்க்குற்ற விசாரணையில் இடம்பெற்றுள்ளோர் பட்டியலில் சரத் பொன்சேகாவின் பெயரும் உள்ளது. எனவே, இராணுவ அத்துமீறல் குறித்து விசாரிக்க தனி குழுவை அமைக்க மகிந்த ராஜபக்ச முடிவுசெய்துள்ளார்.
இந்தக் குழு அளிக்கும் அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த விசாரணை மூலம் சரத் பொன்சேகாவை வழிக்குக் கொண்டுவருவது மகிந்த ராஜபக்ச உத்தரவின் பின்னணியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
போரின் போது சிறீலங்கா இராணுவம் அத்துமீறி நடந்து கொண்டதா என விசாரிக்க உத்தரவிட்டுள்ளார் மகிந்த
பதிந்தவர்:
தம்பியன்
28 October 2009



0 Responses to போரின் போது சிறீலங்கா இராணுவம் அத்துமீறி நடந்து கொண்டதா என விசாரிக்க உத்தரவிட்டுள்ளார் மகிந்த