Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை மீது போர் தொடுத்து இந்தியா தமிழர்களுக்கு தமிழீழத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென்று இந்து மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட தமிழீழ வாழ்வுரிமை மாநாட்டில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்து மக்கள் சகட்சி சார்பில் தமிழீழ வாழ்வுரிமை மாநாடு சென்னை உடுமலையை அடுத்துள்ள பெதம்பமபட்டியில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. மாநில செய்தி தொடர்பாளர் ஜீயர் வெங்கட்ரமணன் தலையமையில் இது நடைபெற்றது. மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத், இனி ஈழம் என்ற தலைப்பில் பேசினார்.

இந்த மாநாட்டிலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டது. 70 ஆயிரம் ஈழத் தமிழர்கள் உயிரிழக்கவும் 5 இலட்சம் தமிழர்கள் அகதிகளாக மாறவும் 3 இலட்சம் தமிழர்கள் முட்கம்பி வேலைகளுக்குள் சிறைவைக்கப்படவும் காரணமான ராஜபக்சவை சர்வதே போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்.

முள்வேலிக்குள் சிறைப்பட்டுள்ள தமிழர்களை பார்வையிட்டு உண்மை நிலையைக் கண்டறிய மனித உரிமை பாதுகாப்பு அமைப்பினரையும், செய்தியாளர்களையும் அனுப்ப வேண்டும். இலங்கைமீது இந்தியா போர்தொடுத்து தமிழீழத்தை உருவாக்க வேண்டும்.

இலங்கைக்கு ஆயுதங்களை விநியோகம் செய்து ஈழத் தமிழர்கள் பேரழிவுக்குக் காரணமான சீனா, தற்போது இந்தியப் பகுதிகளை ஆக்கிரமிக்க ஆக்கிரமிக்க முயற்சி செய்து வருகிறது. சீனாவின் இச்செயற்பாடுகளை தடுக்க வேண்டும். இவ்வாறான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

0 Responses to இந்தியா தமிழீழத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்: இந்து மக்கள் கட்சி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com