Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முள்வேலி முகா‌‌ம்க‌ளில் அடைப்பட்டு கிடக்கின்ற இலங்கைத் தமிழர்களை வெளியேற்றப்படுவது மட்டும் தீர்வாகாது, தனி ஈழம் ஒன்றுதான் தீர்வாகும் என்று ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோ கூறியுள்ளார்.

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரக் கூட்டம் தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் சாலையில் நேற்றுக் காலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோ கலந்து கொண்டு பேசுகை‌யி‌ல், உலக நாடுகள் இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து வரும் நிலையில், முதலமைச்சர் கருணாநிதி பாராட்டு மழையில் நனைந்து கொண்டு திருவிழா நடத்தி வருகிறார்.

இந்த கொடுமை வேறு எங்காவது நடைபெற முடியுமா? இலங்கையில் இனப்படுகொலை செய்யப்பட்ட 20 ஆயிரம் உடல்கள் சரிவர மண்ணில் மூடப்படாத நிலையில் எலும்புகள் மேலே நீட்டிக்கொண்டிருக்கும் செய்தியை இலண்டன் டைம்ஸ் பத்திரிகை வெளியிடுகிறது. ஆனால், இங்கு பத்திரிகைகளை மிரட்டி தனக்கு ஆதரவாக வைத்துள்ளனர்.

இலட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் படுகொலை நடந்து இருக்கிற வேளையில், நான்கு நாட்களில் ஈழத்தமிழர்களுக்கு விடுதலை பெற்று தந்த முதல்வர் வாழ்க என்று நோட்டீஸ் அடித்து ஒட்டுக்கின்றனர். இவர்கள் மனநோய் மருத்துவமனைக்கு அனுப்பப்பட வேண்டியவர்கள். முள்கம்பி வேலிக்குள் அடைப்பட்டு கிடக்கின்ற ஈழத்தமிழர்களை வெளியேற்றப்படுவது மட்டும் தீர்வாகாது.

அவர்கள் சுதந்திரமாக வாழ வேண்டும். ஈழத்தமிழர்களை முள்வேலிக்குள் அடைபடும் சூழ்நிலையை ஏற்படுத்தியது இந்திய அரசு. ஆயுத உதவி செய்ததும் இந்திய அரசு. அதனால் தான் புலிகள் தோற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இலங்கைத் தமிழர்களுக்காக முத்துக்குமார் உள்ளிட்ட 14 பேர் தீக்குளித்தனர். அதற்காக கருணாநிதி ஒரு வார்த்தைக்கூட இரங்கல் எழுதவில்லை.

மாறாக உண்ணாவிரத நாடகம் நடத்தி பிரச்சனையை திசை திருப்பினார். இலங்கையில் அமைதி ஏற்பட வேண்டும். போர் நிறுத்தம் வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்த போது பாரபட்சமின்றி அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு அளித்தன. அப்போது டெல்லி வந்த ராஜபக்சே பிரதமரை சந்தித்த பின்னர் பத்திரிகையாளர்களிடம் கூறும்போது, இலங்கையில் போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. விடுதலைப்புலிகளை அழித்து விட்டுதான் மறுவேலை என்றார்.

இதற்கு ஆறரை கோடி மக்களின் தீர்மானத்தை மதிக்காத ராஜபக்சேவை கண்டித்து முதல்வர் குரல் கொடுக்கவில்லை. உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடும் நிலையில் முதல்வர் செய்த துரோகத்திற்கு மன்னிப்பு கிடையாது. தமிழின யுத்தம் தொடரும், அதனை பிரபாகரன் வழி நடத்துவார். உரிய நேரத்தில் பிரபாகரன் வருவார். ஈழத்தமிழர்களுக்கு தனி ஈழம் ஒன்றேதான் தீர்வு எ‌ன்று வைகோ பே‌சினா‌ர்.

0 Responses to ஈழத்தமிழர்களை முள்வேலிக்குள் அடைபடும் சூழ்நிலையை ஏற்படுத்தியது இந்திய அரசு: வை.கோ

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com