தமிழக மீனவர்கள் மீது சிறீலங்கா கடற்படையினர் நடத்திய தாக்குதலில் கடல் தொழிலாளர்களின் படகு ஒன்று சேதமடைந்துளதுடன், பெருந்திரளான கடல் உணவுகளையும் சிறீலங்கா கடற்படையினர் அபகரித்துள்ளனர்.
தமிழகத்தின் இரமேஸ்வரம், கன்னியாகுமாரி, மாவட்டத்தை சேர்ந்த கடல் தொழிலாளர்கள் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டுவருவது வழமை. இன்நிலையில் கடந்த காலங்களில் தொடராக இராமேஸ்வரம் கடல் தொழிலாளர்கள் மீது சிறீலங்கா கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இன்று காலை தொழிலுக்கு சென்ற இராமேஸ்வரம் மீனவர்களின் படகுகள் மீது சிறீலங்கா காடற்படையினர் தாக்குதல் நடத்தி இம்மீனவர்களின் பெறுமதிவாய்த வலைகளையும் அறுத்தெறிந்துள்ளனர்.
தமிழக கடல் தொழிலாளர்களின் படகுகளில் உள்ள பெருந்திரளான கடல் உணவுகளையும் சிறீலங்கா கடற்படையினர் அபகரித்து சென்றுள்ளனர். கடந்த இருபது நாட்களுக்கு முன்பு சிறீலங்கா கடற்படையினர் இராமேஸ்வர மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு அவர்களது உடைகளை களைந்து விரட்டி அடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
இராமேஸ்வரம் மீனவர்களின் படகுகள் மீது சிறீலங்கா காடற்படையினர் தாக்குதல்
பதிந்தவர்:
தம்பியன்
29 October 2009



0 Responses to இராமேஸ்வரம் மீனவர்களின் படகுகள் மீது சிறீலங்கா காடற்படையினர் தாக்குதல்