Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா கடந்த 23ம் திகதி இரவு வெளிநாடு சென்றவுடன் எதிர்க்கட்சித் தலைவர் நேற்று முன்தினம் (24) வெளிநாடு சென்றுள்ளார். இந்த நிலையில் இந்த விஜயங்கள் குறித்து அரச புலனாய்வுப் பிரிவினர் விசேட கவனம் செலுத்தியிருப்பதாக ஜனாதிபதி செயலகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்க்கட்சித் தலைவர் தனிப்பட்ட காரணங்களுக்காக தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் அவர் சில தினங்கள் அந்த நாடுகளில் தங்கியிருப்பார் எனவும் கூறப்படுகிறது. அமெரிக்கா புறப்பட்டுச் சென்ற ஜெனரல் சரத் பொன்சேகா ஜப்பானில் சில மணித்தியாலங்கள் தங்கியிருந்ததாகவும் குறித்த காலத்தில் வர்த்தக வகுப்பில் வெளிநாட்டு முக்கியஸ்தர் ஒருவரையும், இலங்கையைச் சேர்ந்த சிலரையும் சந்தித்திருப்பதாக தெரியவருகிறது.

இருப்பினும் சரத் பொன்சேகா நாடு திரும்பும் நிலையில், அல்லது திரும்பும் வழியில் வெளிநாட்டு விமான நிலையத்தில் ரணிலைச் சந்திக்கும் வாய்ப்பு இருக்கிறா என தற்போது இலங்கை அரசு மண்டையை போட்டு உடைத்தபடி உள்ளதாக விடையம் அறிந்த வட்டாரங்கள் கருத்துத் தெரிவித்துள்ளன.

0 Responses to வெளிநாடு ஒன்றில் ரணில்- சரத் பொன்சேகா சந்திக்க திட்டமா?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com