Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நக்சலைட்டுகள் வெளிநாடுகளிலிருந்து ஆயுதம் பெறுகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ள இந்திய உள்துறை அமைச்சர் ப சிதம்பரம், விடுதலைப்புலிகளுடன் இணைந்து இந்தியாவின் தெற்கு மற்றும் மத்திய பகுதிக் காடுகளில் பயிற்சி எடுத்ததற்கும், கூட்டங்கள் கூடியதற்குமான சான்றுகளையும் மத்திய புலனாய்வுத் துறையினர் பெற்றுள்ளதாகக் கூறியுள்ளார். மாவோயிஸ்டுகள் புலிகளிடமிருந்து பயிற்சி பெற்றதற்கு போதிய சான்றுகள் கிடைட்துள்ளன என்றார் அவர்.

ஆந்திர பிரதேசம், தமிழ் நாடு, சட்டீஸ்கார் மற்றும் ஒரிஸ்ஸா ஆகிய மாநிலங்களுக்குள் விடுதலைப் புலிகளின் ஊடுருவல் இருக்கும் என மத்திய புலனாய்வுத் துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்ததாகவும், இப்போதைய தகவல்களின்படி நன்கு பயிற்சிபெற்ற 12 விடுதலைப்புலி உறுப்பினர்கள் அண்மையில் இந்தியாவுக்குள் உள்நுழைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் மூன்று குழுக்களாகப் பிரிந்து கேரளா ஊடாக ஆந்திராவின் வச கடற்கரையை அடைந்துள்ளனர் என மேலும் தெரிவிக்க்கப்பட்டுள்ளது.

புலிகள் மாவோயிஸ்டுகளுக்கு பயிற்சியளித்து இந்திய படைகளைத் தாக்குமாறு செய்வதோடு, தாம் இலங்கையில் இழந்த நிலங்களை மீளப்பெறுவதற்காக இலங்கையின் வட மாகாணத்திலுள்ள துருப்புகளைத் தாக்குவதற்கான செயற்பாட்டுத் தளமாக தென்னிந்தியாவைப் பாவிப்பார்கள் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

0 Responses to மாவோயிஸ்டுகளுக்கு பயிற்சியளிக்க 12 விடுதலைப்புலி உறுப்பினர்கள் இந்தியாவுக்குச் சென்றனர் ?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com