முன்பே அறிவிக்காமல் திடீரென கடந்த ஞாயிற்றுக்கிழமை தாய்லாந்துக்குச் சென்ற எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தற்போது அமெரிக்காவில் உள்ள கூட்டுப்படைத் தலைமையதிகாரி ஜெனெரல் சரத் பொன்சேகாவுடன் செய்மதித் தொலைபேசி மூலம் உரையாடியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் கூறியுள்ளன. ஆனால் அவர்கள் இருவரும் பேசிக்கொண்ட விடயங்கள் குறித்த விவரங்கள் தெரிய வரவில்லை.
ரணில் தாய்லாந்திலுள்ள புக்கட் சர்வதேச விமான நிலையத்தில் இருந்தபோது சரத் பொன்சேகாவுடன் செய்மதித் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டுள்ளார். சரத் பொன்சேகா அமெரிக்கா வோஷிங்டனிலிருந்து இந்த உரையாடலில் இணைந்தார். இருப்பினும் சிங்கப்பூரில் வைத்து சரத்பொன்சேகாவை ரணில் சந்தித்ததாகவும் ஒரு செய்திவெளியாகியிருந்தது.
அமெரிக்காவில் தற்போது தங்கியுள்ள சரத் பொன்சேகா இலங்கையில் அரசின் ஆட்சி குறித்து விமர்சித்திருப்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.



0 Responses to ரணிலும் சரத்தும் செய்மதி தொலைபேசியில் உரையாடல்!