Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திண்டிவனத்தில் ஈழ தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பொதுக்கூட்டத்தில், பா.ம.க. நிறுவனர் டாக்டர் இராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ‘'கடந்த ஆண்டு அக்டோபரில் இருந்து ஈழபிரச்சினைக்காக இந்த இயக்கம் பல போராட்டங்களை நடத்தி வந்துள்ளது.

ஒரு ஆண்டாக நாம் போராடிய போதும் தமிழர்கள் ஒத்த குரல் எழுப்பவில்லை.

தமிழனை தேட வேண்டியுள்ளது.

டாஸ்மாக் கடையிலும்,

சினிமா தியேட்டரிலும் இளைஞர்கள் முடங்கி விட்டனர்.

சில இளைஞர்கள் சினிமா நடிகர்களின் பின்னால் செல்கின்றனர்.

பெண்களை டி.வி. கட்டிப்போட்டு விட்டது.

தமிழனை நான் தேடி கொண்டிருக்கிறேன்.

தாய் தமிழ்நாடே என்ன செய்கிறாய்?

என உலகத் தமிழர்கள் கேட்கின்றனர்.

மேலும் அவர்கள் உங்களைத்தான் நம்பியுள்ளோம் என்கின்றனர். ஒவ்வெரு முறையும் நான் கடிதம் எழுதிய பிறகுதான் முதலமைச்சர் கருணாநிதி நடவடிக்கை எடுத்தார். டெல்லிக்கு தாங்கள் சென்று திரும்பியபின் இன்று வரை தலையை தாழ்த்தி கொண்டிருக்கிறோம். ஒன்றுமே நடக்க வில்லை என்பதால் தான் மக்களிடம் பிரச்சினையை கொண்டு செல்கிறோம்.

இலங்கை பிரச்சினைக்காக 16 பேர் தீக்குளித்தனர். ஆனால் 7 கோடி தமிழர்களிடம் எந்த சலனமும் எழவில்லை. விடுதலைப்புலிகளை தீவிரவாதிகள் என்று கூறுவது தவறு. விடுதலை போராட்டம் நடத்துபவர்கள் பயங்கரவாதிகள் கிடையாது. பிரபாகரன் தீவிரவாதி கிடையாது. இலங்கை பிரச்சினையில் தமிழக அரசு எதுவும் செய்யவில்லை. எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க., இலங்கை பிரச்சினைக்காக எப்படியெல்லாம் முழங்கியது? பேரணிகள் நடத்தியது? ஆனால் இன்றைய நிலை என்ன? விடுதலைப்போர் என்றைக்கும் முடிவுக்கு வராது.

அரசியல் தீர்வுக்கு தயாராக இல்லை. தமிழர்களிடையே ஒற்றுமை கிடையாது. பீகாரை சேர்ந்த ஒருவன் மும்பையில் தாக்கப்பட்டால் பீகார் தலைவர்கள் ஒன்று சேர்ந்து போராடுகிறார்கள். அதே போல்தான் பல மாநிலங்களை சேர்ந்தவர்களும் உள்ளனர். விரைவில் இலங்கை மண்ணில் தனிநாடு உருவாகும். அதற்காக நாம் பாடுபடுவோம்'' என்று தெரிவித்தார்.

0 Responses to நாம் போராடிய போதும் தமிழர்கள் ஒத்த குரல் எழுப்பவில்லை: இராமதாஸ்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com