மனித உரிமை மீறல் தொடர்பில் சிறீலங்கா அரசினால் உருவாக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவினால் வரப்போகும் விசாரணை அறிக்கையின் நம்பகத்தன்னை தொடர்பில் கேள்வியும் சந்தேகமும் எழுக்கூடிய வாய்ப்பு உள்ளது என ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி பிலிப்ஸ் அல்ஸ்டன் தெரிவித்துள்ளார்.
சிறீலங்கா அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழு தொடர்பில் அவர் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
சிறீலங்காப் படையினருக்கு எதிராக மனித உரிமை மீறல் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்வதற்கு அவர்களாலேயே உருவாக்கப்பட்ட குழுவின் நம்பகத்தன்மை மற்றும் நடுநிலைமை தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளது.
ஏற்கனவே சனல்4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொளி தொடர்பில் சிறீலங்கா அரசாங்கத்தினால் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவில் நிபுணர் குழு என சிறீலங்காப் படையைச் சேர்ந்து இருவரை சிறீலங்கா அரசாங்கம் நியமித்திருந்துது. அக்குழு குறித்த காணொளி தொடர்பில் விசாரணை முடிவுகளை அறிவிக்கும் போது அவை செயற்கையாக உருவாக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான நிலையில் சிறீலங்கா அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழு எவ்வளவு தூரம் நம்பகத்தன்னையுடன் நடக்கப் போகிறது என பிலிப்ஸ் அல்ஸ்டன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிறீலங்கா விசாரணை ஆணைக்குழுவின் நம்பகத்தன்மையில் சந்தேகம் எழுந்துள்ளது – பிலிப்ஸ் அல்ஸ்டன்
பதிந்தவர்:
தம்பியன்
28 October 2009



0 Responses to சிறீலங்கா விசாரணை ஆணைக்குழுவின் நம்பகத்தன்மையில் சந்தேகம் எழுந்துள்ளது – பிலிப்ஸ் அல்ஸ்டன்