Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அவுஸ்திரேலியாவுக்குப் படகு மூலம் அடைக்கலம் தேடிச் செல்ல முற்பட்டு, தற்போது இந்தோனேசியா கரையோர பாதுகாப்பு படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தமது உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளனர்.

78 இலங்கையர்கள் அடங்கிய அவுஸ்திரேலிய கப்பல் இன்று பிற்பகலில் இந்தோனேசியாவின் வடக்கு பகுதியை சென்றடையுமென தெரிவிக்கின்றது. இவர்கள் அனைவரும் சிறந்த முறையில் பராமரிக்கப்படுவர் என அவுஸ்திரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் பிரிண்டன் ஓ கோனர் தெரிவித்தார்.

ஆனால், இவர்கள் தங்க வைக்கப்பட இருக்கும் தடுப்பு நிலையம், தடுப்புக் காவலில் வைக்கப்படுவோரை துன்புறுத்தும் இடம் என்று ஏற்கனவே குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. மேலும் இந்தக் கைதிகள் கப்பலில் இருந்து இறங்க மறுத்தால் அவர்கள் பலவந்தமாக இறக்கப்படுவார்கள் என்று காவல்துறை அதிபர் தெரிவித்திருந்தார்.

0 Responses to இந்தோனேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் உண்ணாவிரதத்தை முடித்தனர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com