இலங்கையில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் குறித்து காசா பாணியிலான விசாரணைகள் இடம்பெற வேண்டு மென்ற ஐக்கிய நாடுகளின் கோரிக்கையை சிறீலங்கா அரசு நிராகரித்துள்ளது.
சிறீலங்கா இவ்வாறான காசா பாணி விசாரணைக்கு இணங்க மாட்டாது என மனித உரிமைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் சிறீலங்காவுக்கு ஆதரவாகப் பெரும் எண்ணிக்கையான நாடுகள் ஏற்கனவே வாக்களித்துவிட்டன எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஐ.நா சபை தனது ஆணையைப் பெருமளவிற்கு அரசுகளிடமிருந்தே பெறுகின்றது. ஐ.நாவின் பெரும்பாலான உறுப்பினர்கள் இலங்கை குறித்து விசாரணைகளை நடத்துவதற்கு ஏற்கனவே எதிர்ப்பைத் தெரிவித்துவிட்டனர். அவர்களது நிலைப்பாட்டை மதிக்கவேண்டும் என அமைச்சர் சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் பேச்சாளர் ருபேர்ட் கொலவில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் உறுப்பு நாடுகளின் முடிவை மதிக்காமல் அவசரப்பட்டுக் கருத்து வெளியிடுகின்றார் என்றும் அமைச்சர் சமரசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.



0 Responses to காசா பாணியிலான யுத்தக் குற்ற விசாரணைக்கு சிறீலங்கா எதிர்ப்பு