ரஷ்யாவின் வெளிநாட்டு அமைச்சர் லவ்ரோவ் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டதும், அமெரிக்க ராஜாங்க திணைக்களம் மனித உரிமைகள் குறித்த கண்டன அறிக்கையை வெளியிட்டதும் ஒரே சமயத்தில் இடம்பெறவில்லைத்தான். ஆனால் அந்த அறிக்கை காரணமாக ரஷ்யா வெளிநாட்டு அமைச்சரின் விஜயம் இலங்கைக்கு அவ்வளவாக நல்ல சேதியைக் கொடுக்கவில்லை எனத் தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட வரம்புக்குள்ளேயே ரஷ்யாவின் ராஜதந்திர செயல்கள் இருக்க வேண்டுமென அமெரிக்கா ரஷ்யாவை வற்புறுத்தியதால் ரஷ்யாவும் அவ்வாறே குறித்த எல்லைக்குள் நிற்கத்தான் முடியும் என்பதே லவ்ரோவ் இலங்கைக்கு வழங்கிய செய்தி எனத் தகவல்கள் கிடைத்துள்ளன.
ரஷ்யா மன்னார் வளைகுடா பகுதியிலுள்ள எண்ணெய் வளத்தின்மீது நாட்டம் கொண்டுள்ளது. அந்நாடு வழங்கிவந்த ஒத்துழைப்புகளுக்காக இலங்கையும் எதிர்கால எண்ணெய் எடுக்கும் ஒப்பந்தங்களை அதற்கே வழங்கிவிடலாம்.
கொழும்பு, கங்கரமயவிலுள்ள் புத்த விகாரைக்கு லவ்ரோவை வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும், அவரது பயணத்திட்டத்தில் வேறு நிகழ்ச்சிகள் இருந்ததால் இந்த அழைப்பை ரத்துச் செய்துள்ளார். இலங்கையின் தேயிலை இறக்குமதியாளர்களில் ரஷ்யாவே மிகப்பெரிய இறக்குமதியாளர் எனக் கூறுவதில் பெருமையடைந்த லவ்ரோவ், ரஷ்யாவின் பொருட்கள் பலவற்றை இலங்கையில் காணவும் தொழில்துறை மற்றும் உட்கட்டமைப்பு திட்டங்களில் தமது நிபுணத்துவத்தை இலங்கையுடன் பகிரவும் விரும்புவதாகக் கூறியுள்ளாராம்.



0 Responses to ரஷ்யாவிடமிருந்து மஹிந்த சகோதரர்கள் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை