மகிந்தவுக்கு தற்போது கால நிலை சரியில்லையாம். அவருக்கு ஏற்பட்டுள்ள கிரக தோஷங்களின் பாதிப்பைக் குறைப்பதற்காக 30ம் திகதி இந்தியாவின் ஆந்திரா மாநிலத்திலுள்ள திருப்பதி தேவஸ்தானத்தில் விசேட பூஜையொன்றை நடத்தவுள்ளதாக அலரிமாளிகைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற உறுப்பினர் நிருபமா ராஜபக்ஷவின் கணவரான திரு நடேசனினால் இந்த விசேட பூஜை ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதுடன், இலங்கைக்கான முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர் அலோக் பிரசாத்தும் இதற்கான இணைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள பாரிய கிரக தோஷங்களிலிருந்து மீள்வதற்காக நேற்று (29) முதல் நாட்டிற்கு வெளியே இருக்குமாறு ஜனாதிபதியின் சோதிடர்கள் ஆலோசனை வழங்கியிருப்பதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவித்தன. சில தினங்கள் நாட்டிற்கு வெளியே நின்றுவிட்டு நாடு திரும்ப இருக்கிறார் ஜனாதிபதி. இவர் விதியை மதியால் வெல்லலாம் என நினைக்கிறார் போலும். நடப்பது நடந்தே தீரும்... !



0 Responses to திருப்பதியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு கிரக தோஷ பூஜை