பம்பலப்பிட்டிக் கடற்கரையில் சிறீலங்காக் காவல்துறையினரின் நடவடிக்கையினால் இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய காவல்துறை ஒருவர் சிறீலங்கா குற்றத்தடுப்பு பிரிவினரால் பம்பலப்பிட்டிய காவல் நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் ஏனைய காவல்துறையினரையும் அடையாளம் காணும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
நேற்று வியாழக்கிழமை மதியம் பம்பலப்பிட்டி கடற்கரையில் நின்ற இளைஞன் வீதியில் சென்ற வாகனங்கள் மீது கற்களை வீசியுள்ளார். இதனால் இரு வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்துள்ளன. அத்துடன் கடற்கரையால் செல்லும் தொடருந்துக்கும் இவர் கற்களை வீசியுள்ளார்.
இதனால் அங்கிருந்து மக்கள் கூக்குரலை எழுப்ப, குறித்த இளைஞர் அச்சம் காரணமாக கடற்கரையிலிருந்து கடலுக்குள் சென்றுள்ளார்.
எனினும் குறித்த இளைஞன் கரை திரும்ப எந்தனித்த போதும் அங்கு நின்ற சிறீலங்காக் காவல்துறையினர் குறித்த இளைஞர் மீது கட்டைகளால் தாக்கியுள்ளனர்.
இதனால் நீண்ட நேரம் தண்ணீருக்கள் நின்ற இளைஞன் அலைகளுக்குள் சுருண்டு உயிரிழந்துள்ளார்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய காவல்துறை ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
நீரில் மூழ்கி மரணமடைந்த குறித்த இளைஞனின் உடலம் இன்று கரை ஒதுங்கியுள்ளது.

காவல்துறையின் நடவடிக்கையினால் தமிழ் இளைஞன் நீரினுள் மூழ்கி மரணம்! (காணொளி இணைப்பு)
பதிந்தவர்:
தம்பியன்
30 October 2009



0 Responses to காவல்துறையின் நடவடிக்கையினால் தமிழ் இளைஞன் நீரினுள் மூழ்கி மரணம்! (காணொளி இணைப்பு)