இராணுவ சீருடை அணியும் எந்தவொரு படை அதிகாரியோ அல்லது படைச் சிப்பாயோ அரசியல் ஈடுபட முடியாது என சிறீலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய கூறியுள்ளார்.
இராணுவத் தலைமையத்தில் இடம்பெற்ற சிறப்புச் சந்திப்பு ஒன்றில் அவர் இவ்வாறு கருத்துரைத்துள்ளார்.
இராணுவத்தில் உள்ளோர் அரசாங்கத்திற்கு ஆதரவாகவே செயற்பட முடியும். இராணுவ சீருடை அணியும் எந்தவொரு படை அதிகாரியோ அல்லது படைச் சிப்பாயோ அரசியல் ஈடுபடும் உரிமை கிடையாது. அவ்வாறு ஈடுபடுவோர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என எச்சரித்துள்ளார்.



0 Responses to இராணுவச் சீருடை அணிவோர் அரசியலில் ஈடுபட முடியாது!