Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்ப்பாணத்தில் முகாம்களில் உள்ளவர்களுக்கு தொற்றுநோய்த் தாக்கம் அதிகரித்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

யாழ்மாவட்டததைச் சேர்ந்த மக்கள் பெருமளவானவர்கள் பாடசாலைகளிலும் பொதுக் கட்டடங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். மீள்குடியேற்றம் என அழைத்துச் செல்லப்பட்ட இம்மக்கள் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

இம்மக்களுக்கு சீரான சுகாதாரம் இன்மையால் மக்கள் தொற்று நோய்க்கு ஆளாகின்றார்கள். இந்நிலையில் கொடிகாமம் இராமாவில் பகுதியில் உள்ளமுகாமில் மக்களுக்கு மஞ்சள் காமாளை நோய் பரவியுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வவுனியாவில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டவர்களில் ஒருவர் நோய்தாக்கதினால் உயிரிழந்துள்ளார். நோயினால் பாதிக்கப்பட்ட இவர் அடைக்கப்பட்ட பேருந்தில் 8 மணிநோரத்திற்கு மேலாக தொடரான பயணத்தினை மேற்கொண்டு சாகவச்சேரியில் இறக்கப்பட்டபோது மயக்கமடைந்து மருத்துவமனையில் உயிரழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to யாழ்ப்பாண முகாம்களில் உள்ளவர்களுக்கு தொற்றுநோய்த் தாக்கம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com