ஜனாதிபதி முறையை இல்லாது ஒழிப்பதற்கு அல்லது பன்றிக் காய்ச்சலையும், பறவைக்காய்ச்சலையும் ஒழிப்பதற்கு காட்டப்படும் முகியத்துவம் கூட இன்று இனப்பிரச்சினையை தீர்ப்பதில் காட்டப்படுவதில்லை.
ஜனாதிபதி தேர்தல் நடைபெறுமானால் அது தொடர்பிலான எமது கட்சியின் நிலைப்பாட்டை நாம் உரிய வேளையில் அறிவிப்போம். இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையில் ஐக்கிய தேசிய கூட்டணியில் ஜனநாயக மக்கள் முன்னணி இணைந்துக்கொள்ளும். இதற்கான அதிகாரபூர்வமான வைபம் இம்மாத இறுதியில் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறும்.
இதன் மூலம் எந்தவொரு பெரும்பான்மை கட்சி வேட்பாளருக்கும் ஜனாதிபதி தேர்தலின்போது நாம் வெற்று காசோலைகளை எழுதி கொடுப்பதற்கு உடன்படமாட்டோமென ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் எம்.பி தெவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் பொது வேட்பாளர் தொடர்பில் வெள்ளியன்று மாலை எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ எம்.பி மேலும் கூறியுள்ளதாவது:
தேர்தல் கூட்டணிகளுக்கு புறம்பாக இந்நாட்டில் வடக்கிலும் கிழக்கிலும் தெற்கிலும் வாழுகின்ற தமிழ் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் நமது மக்களின் புதிய அரசியல் கோட்பாடுகளை நிலவும் புதிய அரசியல் சூழலுக்கு ஏற்ப உருவாக்கி உலகிற்கு அறிவிக்கவேண்டிய வேளை வந்துவிட்டது.
இந்நாட்டிலே ஒரு தமிழரோ, ஒரு முஸ்லிமோ, ஒரு சிங்கள, கிறிஸ்தவரோ கூட ஜனாதிபதியாகிவிட முடியாது. பிரதமராவதற்கும்கூட முடியாது. எனவே ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் பேசும் மக்கள் தமது வாக்குகளை கவனமாக பயன்படுத்தவேண்டும். இந்நாட்டிலே பயங்கரவாதத்தை அழித்து தமிழ் மக்களை காப்பாற்றி விட்டோம் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
யுத்தத்தின் மூலம் பயங்கரவாதம் அழிக்கப்பட்டதை ஐக்கிய தேசியக் கட்சியும் ஆரவாரத்துடன் வரவேற்றுள்ளது. ஆனால் அடுத்த கட்டமாக பயங்கரவாதம் தோற்றுவிக்கப்பட்டதற்கான அடிப்படை காரணங்கள் அரசியல்தியாக தீர்த்து வைப்பதற்கு முன்னுமை அளிக்கப்படுவதாக தெரியவில்லை. ஜனாதிபதி முறைமையை இல்லாது ஒழிப்பதற்கு அல்லது பன்றிக் காய்ச்சலையும் பறவைக் காய்ச்சலையும் அழிப்பதற்கும் காட்டப்படும் முக்கியத்துவம்கூட இன்று தேசிய இனப்பிரச்சினைக்காக காட்டப்படுவதில்லை.
எங்களுக்கு தனிப்பட்ட முறையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடனோ அல்லது முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுடனோ எந்தவித கோபதாபம் கிடையாது. எமக்கு இருப்பதெல்லாம் எங்கள் மக்கள் தொடர்பான அரசியல் முரண்பாடுகள்தான். ஆனால் இன்று சில பெரும்பான்மை அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும், தங்களது தனிப்பட்ட கோபதாபங்களுக்காகவும், பதவித் தேவைகளுக்காகவும் ஜனாதிபதித் தேர்தலையும், நாடாளுமன்ற தேர்தலையும் பயன்படுத்த நினைக்கின்றார்கள்.
இதில் தமிழ் பேசும் மக்களையும் இழுத்து விடுவதற்கு முயற்சி செய்கின்றார்கள். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை முன்மொழிபவர்கள் அவரது தமிழ், முஸ்லிம் மக்கள் தொடர்பிலான கொள்கை என்ன என்பது பற்றி முதலில் அறிவிக்கவேண்டும். இந்நோக்கத்திலேயே எமது கட்சியின் நிலைபாட்டை நாம் கடந்தவாரம் திட்டவட்டமாக அறிவித்திருந்தோம்.
அது இன்று சிங்கள ஊடகங்களின் மூலமாக சிங்கள அரசியல் கட்சிகள் மத்தியில் பாரிய கருத்து பமாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இதையே நாங்கள் எதிர்பார்த்தோம். இதன் மூலமாக எமக்கு உரிய அடிப்படை பதில்களை அளித்துவிட்டு ஜனாதிபதி வேட்பாளர்களையும் பிரதமர் வேட்பாளர்களையும் பெரும்பான்மை கட்சிகள் அறிவிக்கவேண்டும்.
"பயங்கரவாதம்" தோற்றத்திற்கான அடிப்படை காரணங்கள் தீர்த்து வைப்பதற்கு முன்னுமை அளிக்கப்படுவதாக தெரியவில்லை
பதிந்தவர்:
தம்பியன்
25 October 2009



0 Responses to "பயங்கரவாதம்" தோற்றத்திற்கான அடிப்படை காரணங்கள் தீர்த்து வைப்பதற்கு முன்னுமை அளிக்கப்படுவதாக தெரியவில்லை