கோவில்பட்டி பாரதி நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்திருமாவளவன் பேசுகையில்,
இலங்கை தமிழர்களுக்காக நாம் போராடிக்கொண்டு இருக்கிறோம். தமிழக முதல்வர் கருணாநிதி, 10 எம்.பி.க்கள் குழுவில் என்னையும் இலங்கைக்கு அனுப்பியது என் வாழ்நாளில் மறக்க முடியாததாகும். அதற்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
தமிழ் மக்களுக்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி பாடுபடும். சாதி மதம் கடந்து யார் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்காக குரல் கொடுக்கப்படும். சாதிகளுக்குள் ஏற்படும் மோதலை தடுக்க வேண்டும். நாம் அனைவரும் ஒருங்கிணைந்து தமிழர்களுக்காக போராட வேண்டும். நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்றார்.



0 Responses to இலங்கை பயணத்தை மறக்க முடியாது: திருமா