வியட்னாம் நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட மகிந்தராயபக்ச மூன்று நாள் சுற்றுப்பயணத்தை முடித்து நாடு திரும்பியுள்ளார். பல்வேறு வகையான ஒப்பந்தங்களை வியட்னாமுடன் செய்யப்பட்டுள்ளது.
வியட்னாமின் மக்கள்சபை தலைவரை சிறீலங்கா அரசதலைவர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது இலங்கையின் வடபகுதியில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு வியட்னாம் ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளதாகவும், இதற்காக சிறப்புப் பயிற்சிகளையும் தொழில்நுட்ப வசதிகளையும் வழங்க முன்வந்துள்ளதாக சிறீலங்கா அரசு அறிவித்துள்ளது.
சிறீலங்கா அரச தலைவரின் பயணத்தின்போது வியட்னாமுடன் ஐந்து ஒப்பந்தகளில் சிறிலங்கா கையெழுத்திட்டுள்ளது.
முதலீட்டு துறையினை ஊக்கிவித்தல் தொடர்பான ஒப்பந்தமும்,
இரு நாடுகளுக்கிடையேயான கலாச்சார ஒத்துழைப்பு தொடர்பான உடன்படிக்கையும்,
விவசாயத்துறையினை ஊக்கிவிக்க 2010 தொடக்கம் 2011ம் ஆண்டுவரையான ஒப்பந்தமும்,
கடற்றொழில்துறைக்கு 2010 தொடக்கம் 2013 வரையான காலகட்டத்தில் தொழில்நுட்ப உதவிகளை வழங்கல் தொடர்பான ஒப்பந்தமும்,
குற்றத்தடுப்பு, சுற்றிவளைப்பு தேடுதலில் சட்டரீதியான ஒப்பந்தங்களில் சிறீலங்கா கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்



0 Responses to கண்ணிவெடிகளை அகற்ற வியட்னாமும் இணைகின்றது: சிறிலங்கா